சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது... சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு... - கோப்புப் படம் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வு அட்டவணையின்படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வரும் 2027 ஆம் ஆண்டின் பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்குகின்றன. இதனைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுகள் அனைத்தும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 2027 மார்ச் 9 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 2027 ஏப்ரல் 9 ஆம் தேதியும் நிறைவடைகின்றன. இதில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 83 பாடங்களுக்கும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 121 பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் தேர்வு செய்துள்ள தங்களின் பாடத்திட்டங்களுக்கு ஏற்ப தேர்வுகளை எழுதுவது கட்டாயமாகும். இந்தத் தேர்வுகள் அனைத்தும் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை சுமார் 3 மணிநேரங்களுக்கு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணையை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗