தில்லியில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.2,500 குறைந்து ரூ.1.46 லட்சமாக சரிந்தது. புதுதில்லி: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பொதுமக்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டி வந்த நிலையில், பண்டிகையை முன்னிட்டு, தில்லியில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.2,500 குறைந்து ரூ.1.46 லட்சமாக சரிந்தது. அகில இந்திய சாராஃபா சங்கத்தின் படி, 99.9 சதவீதம் தூய்மையான தங்கம், நேற்றைய முடிவில் 10 கிராமுக்கு ரூ. 1,48,800 ஆக இருந்த நிலையில் இருந்து ரூ. 2,500 சரிந்து 10 கிராமுக்கு ரூ. 1,46,300 ஆக குறைந்தது. வெள்ளியின் விலையும் நேற்றைய முடிவில் கிலோவுக்கு ரூ. 1,94,500 ஆக இருந்த நிலையில் இருந்து ரூ. 2,000 சரிந்து கிலோவுக்கு ரூ. 1,92,500 ஆக குறைந்தது. கடந்த வருடம் அக்டோபர் 18 ஆம் தேதியன்று 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,32,400 ஆகப் பதிவாகியிருந்தது. தற்போது தங்கத்தின் விலை அதைவிட அதிகமாகவே உள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு இதே நாளில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,70,000 ஆக இருந்தது. உலக தங்க கவுன்சிலின் தகவலின் அடிப்படையில், செப்டம்பர் வரையான காலாண்டில் இந்தியாவில் தங்க நகைகளுக்கான தேவை 20 சதவீதம் சரிந்துள்ளது. அதே நேரத்தில் அதன் மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு 16 சதவீதம் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில், ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 20.41 டாலராக சரிந்து 4,068.71 ஆக உள்ளது. இருப்பினும் வெள்ளி விலை அவன்ஸ் ஒன்றுக்கு 52 டாலர் என்ற அளவில் சற்றே உயர்நது வர்த்தகமானது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவை குறைந்ததால் தங்கம் விலை ரூ.2,500 ஆக சரிவு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗