தமிழ்நாட்டில் இரவு 10மணிவரை மழை பற்றிய வானிலை முன்னறிவிப்பு..... மழை - கோப்புப் படம் தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா பகுதிகள் முதல் தெற்கு உள் கர்நாடகா வரை சுமார் 0.9 கி.மீ உயரத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்தில்(இரவு 10 மணிவரை) 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் (நவம்பர் 06): கனமழை எச்சரிக்கை: தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மிதமான மழை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர் ஆகிய 27 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளைய வானிலை நிலவரம் (நவம்பர் 07): கனமழை எச்சரிக்கை: மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். மிதமான மழை: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை தொடரும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த 2 மணிநேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗