பார்தி ஏர்டெல் அதன் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் நாட்டின் 2வது மதிப்புமிக்க நிறுவனம் என்ற இடத்தை கைப்பற்றியது. புதுதில்லி: ஜியோ பிளாட்ஃபார்ம்ஸை முந்தி, பார்தி ஏர்டெல் இன்று அதன் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் நாட்டின் 2வது மதிப்புமிக்க நிறுவனம் என்ற இடத்தை கைப்பற்றியது. பங்குச் சந்தை முடிவில், மும்பை பங்குச் சந்தையில், பார்தி ஏர்டெல் பங்குகள் 1.66 சதவீதம் உயர்ந்து ரூ. 2,096.25 ஆக நிலைபெற்று 2.81% உயர்ந்து ரூ. 2,120 ஆக இருந்தது. மறுபுறம் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்கு 0.90 சதவீதம் சரிந்து ரூ. 1,405.75 ஆக நிலைபெற்று 2 சதவீதம் சரிந்து ரூ. 1,390 ஆக உள்ளது. இதனையடுத்து, பார்தி ஏர்டெல்லின் சந்தை மதிப்பு ரூ. 13 லட்சம் கோடியாகவும், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் சந்தை மதிப்பு ரூ. 12.94 லட்சம் கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ. 17,83,723.93 கோடி சந்தை மதிப்பீட்டுடன் தொடர்ந்து மிகவும் மதிப்புமிக்க உள்நாட்டு நிறுவனமாக நீடிக்கிறது. சந்தை மூலதனம் அடிப்படையில் முதல் ஐந்து நிறுவனங்கள்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - ரூ. 17,83,723.93 கோடி பார்தி ஏர்டெல் - ரூ. 13,08,165.03 கோடி ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் - ரூ. 12,94,559.51 கோடி ஹெச்டிஎஃப்சி வங்கி - ரூ. 12,14,530.78 கோடி ஐசிஐசிஐ வங்கி - ரூ. 11,26,722.63 கோடி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், மொபைல் கட்டண உயர்வால் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாய் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 24 சதவீதம் உயர்ந்து ரூ.10,710 கோடியாக அதிகரித்துள்ளதாக நேற்று அறிவித்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.8,651 கோடியாக இருந்தது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சந்தை மதிப்பில் 2வது இடத்தை கைப்பற்றிய பார்தி ஏர்டெல்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗