இயக்குநர் நெல்சனை நடிகர் கூல் சுரேஷ் விமர்சித்தது பற்றி... லவ் 3.0 போஸ்டர் வெளியீடு வெளிமாநில நடிகர்களை தமிழ் திரைப்படங்களில் நடிக்க வைப்பது தொடர்பான நடிகர் கூல் சுரேஷ் கருத்துக்கு இயக்குநர் பேரரசு மறுப்பு தெரிவித்தார். இன்ஸ்டா பிரபலம் ஆர்னிகா இயக்கி நடித்துள்ள லவ் 3.0 திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு சமீபத்தில் நடந்தது. இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கோவை மாப்பிள்ளை, கே.என். ஸ்மைலி ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மங்கி மைண்ட் பிக்சர்ஸ் சிவகுமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைப்பும், அரவிந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.பி. உதயகுமார், பேரரசு, நடிகர்கள் வனிதா, கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய கூல் சுரேஷ், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் ஜெயிலர் 2 திரைப்படத்தில் தமிழ் நடிகர்களை பயன்படுத்தாமல் வெளிமாநில நடிகர்களைப் பயன்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பி பேசினார். தமிழ் நடிகர்களைப் பயன்படுத்தாமல் வெளிமாநில நடிகர்களை பயன்படுத்துவது தவறானது என அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த இயக்குநர் பேரரசு, கலைஞர்களை மாநிலப் பாகுபாடுகளுடன் பார்ப்பது ஏற்புடையது இல்லை எனக் குறிப்பிட்டு மறுத்து பேசினார். தொடர்ந்து பேசிய அவர், "கூல் சுரேஷ் நாளை தெலுங்கு பட வாய்ப்பு கிடைத்தால் வேண்டாம் என்பாரா? நடிகர்களின் உழைப்பை மட்டுமே மதிப்பிடவேண்டும்" என தனது பேச்சை நிறைவு செய்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
லவ் 3.0 போஸ்டர் வெளியீடு: இயக்குநர் நெல்சனை சீண்டிய கூல் சுரேஷ்!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗