கெளரி கிஷனின் லவ் ஆல்வேஸ் இணையத் தொடர் வெளியானது பற்றி... லவ் ஆல்வேஸ் - Photo : Hotstar கெளரி கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் ஆல்வேஸ்’ இணையத் தொடர் இன்று காலை வெளியானது. கொரிய இணையத் தொடரான, ஹியர் வி கோ அகைன் என்ற தொடரைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள தொடர் லவ் ஆல்வேஸ். இதில் கெளரி கிஷன் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் தொடரை 'வல்லமை தாராயோ', 'கே.டி என்கிற கருப்புதுரை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். மேலும் இந்தத் தொடரில், ரம்ஜான் முகமது, ஜெயபிரகாஷ், ஜெயசுதா மற்றும் மாயா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனனர். காதல், குடும்பம் மற்றும் நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், வயது பின்னோக்கிச் செல்லும் கற்பனைக் கதையாக உருவாகியுள்ளது. பிரிவதற்கு தயாராக இருக்கும் வயதான தம்பதியினர், திடீர் திருப்பத்தால் தங்களின் 20 வயது இளமைக் காலத்துக்குச் சென்று, தங்களை பரிசோதிக்கும் கதையாக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கோணத்தில், தலா 30 நிமிடங்கள் கொண்ட 8 எபிசோடுகள் அடங்கிய லவ் ஆல்வேஸ் இணையத் தொடர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
‘லவ் ஆல்வேஸ்’ இணையத் தொடர் வெளியானது!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗