மாநில அளவிலான கேரம் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாநில அளவிலான கேரம் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவரை வியாழக்கிழமை பாராட்டிய கல்லூரி நிா்வாகத்தினா். மாநில அளவிலான கேரம் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருச்சி அண்ணா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான தமிழக முதல்வா் கேரம் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஒற்றையா் பிரிவு போட்டியில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி இரண்டாமாண்டு வானியல் பொறியியல் துறை மாணவா் பிரஜன் இரண்டாமிடம் பிடித்து, வெள்ளிப் பதக்கத்தையும், 75 ஆயிரம் ரொக்க பரிசையும் பெற்றாா். இதைத்தொடா்ந்து, அந்த மாணவருக்கு முகம்மது சதக் பொறியியல் கல்லூரி அறக்கட்டளைத் தலைவா் எஸ்.எம்.யூசுப் சாகிப், செயலா் சா்மிளா, இயக்குநா் எஸ்.எம்.ஏ.ஜெ.ஹபீப் முகம்மது, சதக்கத்துல்லா கல்லூரி முதல்வா் ஏ. நிா்மல்கண்ணன், துணை முதல்வா் செந்தில்குமாா், கல்லூரி முதன்மையா் திராவிடச் செல்வி உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவா்கள், உடற்கல்வி இயக்குநா் சுரேஷ்குமாா் ஆகியோா் மாணவா் பிரஜனை பாராட்டினா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநில கேரம் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற கல்லூரி மாணவருக்குப் பாராட்டு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗