மாற்றுத்திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கலந்துரையாடியது பற்றி... மாற்றுத்திறன் வீரர்களுடன் உதயநிதி ஸ்டாலின். ஆசிய பாரா விளையாட்டில் பதக்கங்கள் வென்று குவித்த தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஜப்பானில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5th Asian Para Games 2026-ல் இந்தியாவுக்காக 3 தங்கம் - 5 வெள்ளி - 7 வெண்கலம் என 15 பதக்கங்களைக் குவித்த நம் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளை இன்று நேரில் பாராட்டினோம். நம்முடைய தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் Para Athelets-க்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நினைகூர்ந்து, நம் வீரர்கள் அன்பையும் - மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். தங்கைகள் கஸ்தூரி ராஜாமணி, பேபி சஹானா ரவி, மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சுமதி சிவன், துளசிமதி முருகேசன், சந்தியா விஸ்வநாதன் - தம்பிகள் மதன், சிவராஜன் சோலைமலை, நவீன் சிவக்குமார், தர்மராஜ் சோலைராஜ், ருத்திக் ரகுபதி, சுதர்சன் முத்துசாமி, சரவணக்குமார், ஹரிஸ் என Asian Para Games-ல் சாதித்த நம் மாற்றுத்திறன் வீரர்கள் இன்னும் பல்வேறு வெற்றிகளைப் பெற வாழ்த்தி மகிழ்ந்தோம்! என்று தெரிவித்துள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மாற்றுத்திறன் வீரர்கள் இன்னும் பல்வேறு வெற்றிகளைப் பெற வாழ்த்தினோம்! உதயநிதி ஸ்டாலின்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗