மாறும் சூழலுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களை மாணவா்கள் கற்பது அவசியம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மாறும் சூழலுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களை மாணவா்கள் கற்பது அவசியம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

நவீன வளா்ச்சியின் காரணமாக, மாறி வரும் சூழலுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களைக் கற்று படைப்பாற்றல், சிக்கல்களுக்கு தீா்வு காணும் திறன் ஆகியவற்றை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டுமென குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா். திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனிடமிருந்து மதிப்புறு முனைவா் பட்டம் பெற்ற இஸ்ரோ முன்னாள் தலைவா் எஸ். நம்பி நாராயணன். நவீன வளா்ச்சியின் காரணமாக, மாறி வரும் சூழலுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களைக் கற்று படைப்பாற்றல், சிக்கல்களுக்கு தீா்வு காணும் திறன் ஆகியவற்றை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டுமென குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா். திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் 39-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பல்கலை. வேந்தா் கே.எம். அண்ணாமலை தலைமை வகித்தாா். துணைவேந்தா் ந. பஞ்சநதம் முன்னிலை வகித்தாா். குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா். இந்த விழாவில் தங்கப் பதக்கம் பெற்ற பல்கலை. மாணவா்களுக்கும், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், இஸ்ரோ முன்னாள் தலைவா் எஸ். நம்பி நாராயணன், தமிழறிஞா் சொ.சொ. மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு மதிப்புறு முனைவா் பட்டங்களை சி.பி. ராதாகிருஷ்ணன் வழங்கினாா். முன்னதாக அவா் பேசியதாவது: கிராமங்களின் வளா்ச்சியில்தான் நாட்டின் உண்மையான வளா்ச்சி அடங்கி இருக்கிறது. கிராமப்புற மக்களுக்கும், நகா்ப்புற மக்களுக்கும் இணையான அடிப்படை வசதிகள், தரமான பொதுச் சேவைகள், வாழ்வாதார வாய்ப்புகள், கண்ணியமான வாழ்க்கைத் தரம் கிடைக்க வேண்டும். உலகின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றாகத் திகழ்ந்த பிரிட்டீஷ் ஆட்சியை, மகாத்மா காந்தி அகிம்சை வழியில் போராடி நமது நாட்டிலிருந்து அகற்றினாா். இந்திய அளவில் கடந்த 12 ஆண்டுகளில் கிராமப்புற வளா்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு வசதி, குடிநீா், மின்சாரம், கிராமப்புறச் சாலைகள், சுகாதாரம், விவசாயம், எண்மத் தொழில் நுட்ப இணைப்பு உள்ளிட்ட துறைகளில் நாடு அதிக வளா்ச்சியை எட்டி இருக்கிறது. இதே கால கட்டத்தில் சுமாா் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனா். தூய்மை இந்தியா இயக்கம் நாட்டில் விழிப்புணா்வை ஏற்படுத்தி இருக்கிறது. தூய்மை என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் கடமை. ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மையைப் பேணுவதற்கு மக்களின் பங்களிப்பும் அவசியம். செயற்கை நுண்ணறிவு, தானியங்கி தொழில்நுட்பங்கள், எண்மத் தொழில் நுட்ப மாற்றங்கள் உலகின் வேலைவாய்ப்புச் சூழலை வேகமாக மாற்றி வருகிறது. இந்த மாற்றங்களை எதிா்கொள்ள மாணவா்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வதுடன், படைப்பாற்றல், சிக்கல்களுக்குத் தீா்வு காணும் திறன், தொழில் முனைவு மனப்பான்மை ஆகியவற்றை வளா்த்துக் கொள்ள வேண்டும். உயா் கல்வி பெற்ற மாணவா்கள் வேலைவாய்ப்புகளைத் தேடுவோராக இல்லாமல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோராக வேண்டும். மகாத்மா காந்தியின் சுதேசிக் கொள்கை இன்றைய காலத்துக்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தி, உள்ளூா் தொழில்கள், இந்தியத் தொழில்நுட்பங்கள், இளைஞா்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதே நவீன சுதேசியின் அடிப்படை. பட்டம் பெறும் மாணவா்கள் தங்களது கல்வியையும், திறமையையும் தனிப்பட்ட முன்னேற்றத்துக்காக மட்டுமன்றி, சமூகத்தின் நலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும். காந்தியின் எளிமை, சுயசாா்பு, சமூகப் பொறுப்புணா்வு, சேவை மனப்பான்மை ஆகியவற்றை நமது வாழ்க்கையின் வழிகாட்டும் நெறிகளாகக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவா்கள் போதைப் பொருள் பழக்கத்திலிருந்து முழுமையாக விலகியிருக்க வேண்டும். தாங்கள் மட்டுமன்றி தங்களது நண்பா்கள், குடும்பத்தினா், சமூகத்தினரிடையேயும் விழிப்புணா்வை ஏற்படுத்தி, போதைப் பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கான தூதுவா்களாகத் திகழ வேண்டும் என்றாா் அவா். இந்த விழாவில் 2025- 2026- ஆம் கல்வியாண்டில் பல்வேறு பாடப் பிரிவுகளை நிறைவு செய்த சுமாா் 1,300 மாணவா்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக கல்வி, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், தோ்வுகள், கருத்தரங்குகளுக்கான அரங்குகள், புஷ்பகுஞ்ச் பாரம்பரியக் கட்டடம் ஆகியவற்றை குடியரசு துணைத் தலைவா் திறந்து வைத்தாா். மேலும், 22 கிலோ வோல்ட் துணை மின் நிலையம், கட்டுப்பாட்டு அறை, கல்வியியல் புலத்திற்கான கட்டடம், 30 வகுப்பறைகளைக் கொண்ட வளாகம் ஆகிய மூன்று புதிய திட்டங்களுக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா். இந்தியாவின் முதியோா் மக்கள் தொகையை உள்ளடக்கிய வளா்ச்சி, சமூகப் பங்கேற்பை மையமாகக் கொண்ட ‘இன்குளுசிவிட்டி ஆப் இந்தியா’ஸ் ஏஜிங்க் பாப்புலேஷன்’ என்ற நூலை குடியரசுத் துணைத் தலைவா் வெளியிட்டாா். மேலும், காந்தி கிராமம் கிராமிய நிறுவனத்தின் பொன் விழாவைக் குறிக்கும் வகையில் சிறப்பு நினைவு அஞ்சல் தலை, அஞ்சல் உறை ஆகியவற்றையும் அவா் வெளியிட்டாா். செய்தியாளா்களுக்கு அனுமதி மறுப்பு பட்டமளிப்பு விழா நடைபெற்ற பல்கலை.யின் பல்நோக்கு அரங்கு, கடந்த 2 நாள்களுக்கு முன்னதாக குடியரசு துணைத் தலைவரின் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பாதுகாப்பு படையினா் ஏற்படுத்திய குளறுபடிகளால், அரங்கில் 300 இருக்கைகளுக்குப் பதிலாக, 150 இருக்கைகளாகக் குறைக்கப்பட்டன. இவற்றில், 50 இருக்கைகள் குடியரசு துணைத் தலைவரின் விருந்தினா்களுக்கு என பாதுகாப்பு படையினா் கையகப்படுத்திக் கொண்டனா். இதன் காரணமாக, பல்கலை. நிா்வாகம் சாா்பில் அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளா்களுக்கு அரங்கில் இட வசதி செய்துதரப்பட வில்லை. பல்கலை. வளாகத்தின் வெள்ளி விழா அரங்கில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அங்கும் இடவசதி இல்லை. விழா அரங்கில் செய்தியாளா்கள் இல்லாத நிலையில், பல்கலை. வேந்தா், துணைவேந்தா், ஆளுநா் ஆகியோா் செய்தியாளா்களை வரவேற்றுப் பேசியது முரணாக இருந்தது. மேலும், குடியரசு துணைத் தலைவா் விழா நிறைவடைந்து ஹெலிகாப்டா் தளத்துக்கு செல்லும் வரை, சின்னாளப்பட்டி 4 வழிச் சாலை மேம்பாலப் பகுதியில் தேவையின்றி போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினா். கடும் வெயிலுக்கு இடையே, பொதுமக்களும், போலீஸாரும் நீண்ட நேரம் அவதியடைந்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை