தென்காசி மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணாவுக்கு வாழ்த்துத் தெரிவித்த முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க நிா்வாகிகள். தென்காசி மாவட்ட புதிய ஆட்சியரை மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க நிா்வாகிகள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா். தென்காசி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல் பெண் ஆட்சியா் மோனிகா ராணாவை, தென்காசி மாவட்ட நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க கௌரவச் செயலா் ரவணசமுத்திரம் முகம்மது ஸலீம், சங்க உறுப்பினா் புகாரி மீரா சாஹிப் ஆகியோா் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா். அப்போது, மாநிலத்திலேயே சிறப்பாக செயல்பட்டு வரும் தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் மேலும் சிறப்பாக செயல்பட உதவி செய்யவும், தென்காசி மாவட்டத்துக்கு பொது மையவாடி திட்டத்தின் கீழ் தனியாரிடம் இருந்து வாங்கும் நிலத்தை விரைவாக முடித்து பொது மையவாடியை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனா். கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணா உறுதி அளித்தாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗