குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை ஏற்பட்டது ஏன்? என்பது பற்றி அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் நிர்மல் குமார் குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் வருகையின்போது மின்தடை ஏற்பட்டது ஏன்? என்பது பற்றி அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (அக். 30) காலை மதுரை வந்தார். அங்கு முத்துராமலிங்கத் தேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக இன்று மாலை 5.30 மணியளவில் கோயிலில் அம்மன் சன்னதி வாசலுக்கு காரில் வருகை தந்தார். சாமி தரிசனம் முடித்துவிட்டு அஷ்டசக்தி மண்டபத்துக்கு வெளியே குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மீனாட்சி அம்மன் கோயிலில் மின்தடை ஏற்பட்டது. சில வினாடிகள் மட்டுமே நீடித்த மின்தடை மீண்டும் மின் விநியோகம் தொடர, சிறிது நேரத்திலேயே மீண்டும் மின்தடை தொடர்ந்ததால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் வருகையின்போது மின்தடை ஏற்பட்டது ஏன்? என்பது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பதிவில், “குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இன்று மாலை 5:35 மணிக்கு நுழைந்தார். தரிசனம் முடித்து மாலை 6:25 மணிக்கு வெளியே வந்தார். அவரது வருகையையொட்டி, பிற்பகல் 3:30 மணி முதல் கோயில் முழுவதுமாக ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. தரிசனம் முடித்த பிறகு கிழக்கு கோபுரத்திற்கு முன்னால் துணைத் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த நேரத்தில், கோயில் மின் அறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கோயிலுக்குள் மின்தடை ஏற்பட்டது. உடனடியாக, மின்சாரம் ஜெனரேட்டரிலிருந்து மின்சார வாரியத்தின் விநியோகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றம் 2 நிமிடங்களுக்குள் மேற்கொள்ளப்பட்டது” எனப் பதிவிட்டுள்ளார். Minister CTR Nirmal Kumar has provided an explanation regarding why a power outage occurred during the visit of Vice President CP Radhakrishnan. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்தடை ஏன்? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!
📅
📍 Madurai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗