மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வியாழக்கிழமையில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து மின்சார வாரியம் அளித்த விளக்கம் பற்றி... மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - கோப்புப் படம் மீனாட்சி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை (அக். 29) ஏற்பட்ட மின்வெட்டு குறித்து மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை மாலையில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதாகவும், இதனால் சுவாமி தரிசனமும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியும் பாதிக்கப்பட்டதாக பக்தர்களும் ஊழியர்களும் தெரிவித்தனர். இதனிடையே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சுவாமி தரிசனத்துக்கு சென்றிருந்ததால், மின்வெட்டு ஏற்பட்டதைக் குறிப்பிட்டு, தவெக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. கோயிலில் இறைவனை பிரார்த்தனை செய்யும்போதுகூட மின்தடை ஏற்படுகிறது என்று விமர்சித்தார். இந்த நிலையில், மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்திருப்பதாவது, "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 350 கே வி ஏ (KVA) மின் பளுகொண்ட உயர் அழுத்த மின் இணைப்பு (HT SC) உள்ளது. மேலும் அவசர காலங்களுக்காக இரண்டு 125 கே வி ஏ (KVA) திறன்கொண்ட மின்சார ஜெனரேட்டர்கள் உள்ளன. இன்று (அக்.30) மிக முக்கிய பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு மதுரை மின்சார ஆய்வாளர் கோவில் வளாகத்தை ஆய்வு செய்து, கோவில் மின்சாரப் பிரிவு மூலம் சில பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதன்படி, கோவில் மின்சாரப் பிரிவு, வியாழக்கிழமை மாலை 4.20 மணிக்கு மின் வழங்கலை ஜெனரேட்டர் மின் இணைப்பிற்கு மாற்றியது. பணிகள் நிறைவடைந்த பின், மாலை 5.35 மணிக்கு மின் மின்வாரிய தொகுப்புக்கு இணைப்பு மாற்றப்பட்டது. இதற்கு 1.5 நிமிடங்கள் மட்டுமே ஆனது. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் மின்வாரிய தொகுப்பில் எந்தவித மின்தடையும் ஏற்படவில்லை" என்று தெரிவித்துள்ளனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
📢 விளம்பரம் • Advertisement
விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗