மேடம் ப்ளீஸ் கதவைத் திறங்க..குழந்தையுடன் வந்த பெண் உட்பட 4 பேர் குரூப் 2 தேர்வு எழுத முடியாமல் தவிப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
மேடம் ப்ளீஸ் கதவைத் திறங்க..குழந்தையுடன் வந்த பெண் உட்பட 4 பேர் குரூப் 2 தேர்வு எழுத முடியாமல் தவிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் குரூப்-2 தேர்வு எழுத குழந்தையுடன் வந்த பெண் உட்பட 4 பேர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாமல் நீண்ட நேரம் வெளியே காத்திருந்தும் தேர்வு எழுத முடியாமல் தவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் மாநிலம் முழுவதும் குரூப்-2 போட்டித் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 23 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதற்காக பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான தேர்வர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தாமதமாக வந்த தேர்வர்கள் இந்நிலையில், ராணிப்பேட்டை பகுதியிலுள்ள எல்.எப்.சி. நிதியுதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் குரூப்-2 போட்டி தேர்வு நடந்தது. இத்தேர்வு மையத்திற்கு காலை முதலே தேர்வர்கள் வருகை தந்தனர் காலை 9 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்வு எழுதுவதற்காக வந்த 4 தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தேர்வு மையத்திற்கு வந்துள்ளனர். அவர்களை தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதி கோரி நீண்ட நேரமாக வெளியே காத்திருந்தும் உள்ளே அனுமதிக்காததால் பெரும் ஏமாற்றமும், வேதனையும் அடைந்தனர். குறிப்பாக, பல்வேறு சிரமங்களுக்கு இடையே போட்டி தேர்வுக்காக தயாராகி, தேர்வு எழுத வேண்டும் என்ற கனவுடன் வந்த குழந்தையுடன் வந்த பெண் உட்பட 4 பேரும் தேர்வு மையத்தின் வெளியே நின்று மேடம் ப்ளீஸ் கதவை திறங்கள் திறங்கள் என தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், நீண்ட நாட்களாக தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டதால் 4 பேரும் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டனர். அதேபோல, அரசு பணியில் சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வந்த தேர்வர்கள் தேர்வு எழுத முடியாமல் வெளியே காத்திருந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை