மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிக்காக, 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது குறித்து... மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம் - கோப்புப்படம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக முதல் பிரிவில் 2-ஆவது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் உள்ளது. இதன் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்தி நிறுத்தம் முழு அளவில் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில், முதல் பிரிவில் 2-ஆவது அலகில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து, வரும் 17-ஆம் தேதிக்குள் மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அனல் மின்நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி: 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்