காய்கறி விலைகளின் இருமடங்கு உயர்ந்துள்ளது குறித்து... மேட்டுப்பாளையம் - குன்னூர் பாதையில் மண் சரிவு - படம்: தினமணி மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், குன்னூரில் காய்கறிகளின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் பர்லியாறு உள்ளிட்ட இடங்களில் கடந்த சனிக்கிழமை மண் சரிவு ஏற்பட்டது. இதனால், பாறைகள், கற்கள், மண், மரங்கள் சாலையில் விழுந்ததால் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் அத்தியாவசியப் பொருள்கள் விலை இருமடங்கு உயர்ந்து, ஒரு கட்டு மல்லி ரூ. 60, முள்ளங்கி கிலோ ரூ. 90, தக்காளி கிலோ ரூ. 45-க்கு விற்பனையாகிறது. சாலைப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து கனரக வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டால் மட்டுமே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேட்டுப்பாளையம் - குன்னூர் பாதையில் மண் சரிவு: காய்கறி விலைகளின் இருமடங்கு உயர்வு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗