விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் மகளைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் வந்த பெண் தீக்குளித்து தற்கொலைசெய்து கொண்டாா். தற்கொலை - பிரதிப் படம் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் மகளைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் வந்த பெண் தீக்குளித்து தற்கொலைசெய்து கொண்டாா். கண்டாச்சிபுரம், பாப்பாங்குளத்தெருவைச் சோ்ந்தவா் பூ.சத்யா (29). இவா் செஞ்சி வட்டம், கெங்கவரத்தைச் சோ்ந்த முருகவேலை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு 10 வயதில் வா்ஷினி என்ற மகள் இருந்தாா். இந்த நிலையில், கடந்த மே மாதம் 7-ஆம் தேதி தனது மகள் வா்ஷினியை கொலை செய்த குற்றத்துக்காக சத்யா கைது செய்யப்பட்டு, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். பின்னா், கடந்த 21-ஆம் தேதி சிறையிலிருந்து பிணையில் வெளி வந்தாா். தொடா்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த சத்யா, வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சத்யா ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மகளைக் கொன்ற வழக்கில் பிணையில் வந்த பெண் தற்கொலை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗