கதாநாயகிகளை மையமாகக் கொண்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாவது குறித்து... மைசா | மூக்குத்தி அம்மன் 2 | ஈதா அடுத்த இரு மாதங்களில் கதாநாயகிகளை மையமாகக் கொண்ட 6 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. 2026 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 2 மாதங்களே உள்ளன. மேலும், அடுத்த வாரம் தீபாவளி திருநாளையொட்டி உச்ச நடிகர்களின் திரைப்படங்களும் வெளியாகவுள்ளன. இதனிடையே, அடுத்த 2 மாதங்களில் கதாநாயகிகளை மையமாகக் கொண்ட 6 முக்கிய திரைப்படங்களும் வெளியாகின்றன. தீபாவளி திருநாளையொட்டி நவம்பர் 6-ல் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 படம் வெளியாகிறது. மேலும், நயன்தாரா நடிப்பிலேயே ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள ராக்காயி திரைப்படமும் இந்தாண்டு டிசம்பரில் வெளியாகிறது. ரஷ்மிகா மந்தனா நடிப்பில் ஆக்சன் காட்சிகளால் உருவாகியுள்ள மைசா திரைப்படம், நவ. 27-ல் வெளியாகிறது. மகாராஷ்டிரத்தில் மிகவும் புகழ்பெற்ற லாவணி நடனக் கலைஞர் விதாபாய் நாராயண்காவ்ங்கர் கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ள ஈதா திரைப்படம், டிச. 4-ல் வெளியாகிறது. பாலிவுட்டில் திரிப்தி டிம்ரி நடிப்பில் உருவாகியுள்ள கமல் ஔர் மீனா திரைப்படம், வருகிற டிசம்பர் மாதம் வெளியாகிறது. இந்தப் படம், மறைந்த பாலிவுட் இயக்குநர் கமல் அம்ரோஹி மற்றும் அவரது காதல் மனைவி மீனா குமாரி இடையிலான உண்மைக் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்சன், காதல், அமானுஷ்யம் என கலவையான கதையுடன் அனீத் பத்தா நடிப்பில் உருவாகியுள்ள சக்தி ஷாலினி திரைப்படம், இந்தாண்டு டிசம்பர் அல்லது அடுத்த மார்ச் மாதத்துக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மகளிர் மட்டும்! அடுத்தடுத்து வெளியாகும் 'கதாநாயகிகளை மையமாகக் கொண்ட படங்கள்'
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗