'மக்கள் பேசவே கூச்சப்படும் உடல்நல பிரச்னை எனக்கு உள்ளது'

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
'மக்கள் பேசவே கூச்சப்படும் உடல்நல பிரச்னை எனக்கு உள்ளது'

பட மூலாதாரம், Monica Thomas இந்தச் செய்தியில் மருத்துவ அறிகுறிகள் குறித்த விரிவான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மோனிகா தாமஸ் தனது பதின்பருவத்தில் இருந்தபோது, பிறப்புறுப்புப் பகுதியில் அரிப்பு மற்றும் வலியை அனுபவிக்கத் தொடங்கினார். ஆனால், பலமுறை மருத்துவர்களைச் சந்தித்தபோதிலும், அது பிறப்புறுப்பில் ஏற்படும் பூஞ்சைத் தொற்று என்றே கூறி அவரது பிரச்னை புறக்கணிக்கப்பட்டது. அவரது அறிகுறிகள் மேலும் மோசமடைந்தன. புண்களும் கொப்புளங்களும் ஏற்பட்டதால், அவர் தொடர்ந்து வலியால் அவதிப்பட்டார். "என்னால் நடக்க முடியாததால், நீண்ட காலமாகப் படுக்கையிலேயே இருக்க வேண்டியிருந்தது" என்று மோனிகா கூறுகிறார். ஆறு மாதங்களில் 28 முறை பரிசோதிக்கப்பட்ட பிறகே, தமக்கு பயாப்ஸி பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகத் தெரிவித்தார் மோனிகா. ஒரு சமூகமாக நாம் மகளிர் மருத்துவம் தொடர்பான உடல்நலப் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதில்லை என்பதால், அறிகுறிகள் குறித்துப் பேசுவதில் ஒரு தயக்கம் நிலவுகிறது என்று அவர் குறிப்பிட்டார். "மருத்துவர்களிடம் செல்லும்போது கூட, என்னைப் பொறுத்தவரை ஆடைகளைக் கழற்ற வேண்டியிருப்பது சங்கடமாக இருக்கிறது... மருத்துவர்கள் என்னைப் பார்க்கும்போது வெட்கமாக இருக்கிறது" என்று கூறும் அவர், "ஆனால், அதே நேரத்தில், நீங்கள் வலியால் அவதிப்படும்போது அல்லது அரிப்பு ஏற்பட்டு அசௌகரியமாக உணரும்போது, அந்தப் பிரச்னையுடன் தொடர்ந்து வாழ்வதும் அதே அளவுக்குக் கடினமானதுதான்"என்கிறார். End of அதிகம் படிக்கப்பட்டது பிரிட்டனின் சஃபோக் பகுதியைச் சேர்ந்த 34 வயதான மோனிகாவுக்கு இறுதியில் 'லைக்கன் ஸ்க்லெரோசஸ்' (Lichen sclerosus) என்ற பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பட மூலாதாரம், Dr Nighat Arif பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு பெண்கள் நலனில் நிபுணத்துவம் பெற்ற பொது மருத்துவரான மருத்துவர் நிகத் ஆரிஃப் கூறுகையில், பிறப்புறுப்புகளைப் பாதிக்கும் இந்த வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய அழற்சி பாதிப்பு, வெள்ளைத் திட்டுகள் உருவாகுதல், அரிப்பு, வலி, தோல் பிளவுபடுதல் மற்றும் கிழிசல்கள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். இந்தப் பாதிப்பு ஆண்களையும் பெண்களையும் பாதிக்கிறது. இருப்பினும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், பெண்ணுறுப்புப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சிறிய அபாயமும் உள்ளது. "உடலுறவு கொள்வதும், சிறுநீர் கழிப்பதும் மிகவும் வலியை ஏற்படுத்தும். இது பால்வினைத் தொற்றுகளுடன் குழப்பிக்கொள்ளப்படுகிறது. ஆனால், இது தொற்றக்கூடியதல்ல" என்று அவர் பிபிசி ரேடியோ 5 லைவ் பாட்காஸ்டான 'தட் டைம் ஆஃப் தி மந்த்' நிகழ்ச்சியிடம் தெரிவித்தார். பெண்ணுறுப்பைப் பாதிக்கும் லைக்கன் ஸ்க்லெரோசஸ் நோயின் பரவல் குறித்த ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. இருப்பினும், மேற்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் வார்விக்ஷயர் பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, சுமார் 1 சதவீதப் பெண்களை இந்தப் பாதிப்பு தாக்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொள்ள உதவிய மருத்துவர் சோஃபி ரீஸ் பிபிசியிடம் கூறுகையில், "இந்த மதிப்பீடு உண்மையான எண்ணிக்கையைவிடக் குறைவாகவே இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதி. ஏனெனில், இந்தப் பாதிப்பைக் கண்டறிவதில் பெரும்பாலும் நீண்ட தாமதம் ஏற்படுகிறது என்பது நமக்குத் தெரியும். சிலருக்கு அவர்களது வாழ்நாள் முழுவதும் இந்தப் பாதிப்பு கண்டறியப்படாமலேயே போகக்கூடும்.'' என்றார் "துரதிர்ஷ்டவசமாக, பெண் பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும் அறிகுறிகளுக்காக மருத்துவ உதவியை நாடுவதில் அதிகமான அவமான உணர்வும் சங்கடமும் நிலவுகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வும் குறைவாகவே உள்ளது. சுகாதாரத் துறை நிபுணர்களிடம்கூட இந்த விழிப்புணர்வின்மை காணப்படுகிறது" என்றார் அவர். தொடர்ந்து பேசிய அவர், "இந்தப் பாதிப்பு உண்மையில் எவ்வளவு பேரிடம் காணப்படுகிறது என்பதை அறிய இன்னும் அதிகமான ஆய்வுகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன" என்றார். பட மூலாதாரம், Clare Baumhauer தவறான நோயறிதல்கள் பல ஏற்பட்டதால், தனது மனநலம் "கணிசமாக" பாதிக்கப்பட்டதாகக் கூறும் மோனிகா, "எப்படித் தொடர்ந்து வாழ்வது என்று எனக்குத் தெரியவில்லை... எந்தப் பதிலும் கிடைக்காத நிலையில், அது மிகவும் கொடுமையான, தனிமையான காலமாக இருந்தது" என்கிறார். அவருக்கு ஹெர்பீஸ் தொற்றுக்கான மருந்துகள் வழங்கப்பட்டன. "தோல் மருத்துவரிடம் சென்றபோது, ஒரு சந்திப்பின்போது நான் மிகவும் வருத்தமடைந்தேன். நான், 'இது அந்தப் பாதிப்பு இல்லை' என்று கூறியதால், அவர் என் மீது மிகவும் கோபமடைந்தார். பின்னர், எனக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்வதற்காக ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்." லைக்கன் ஸ்க்லெரோசஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு அவருக்கு "வயது மிகவும் குறைவு" என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். "ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பாதிப்பு எல்லா வயதுப் பெண்களுக்கும் ஏற்படுகிறது. குழந்தைப் பருவத்தில் கூட இது ஏற்படலாம். எனவே, இதை எதிர்கொள்வது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும், ஏதோ தவறாக இருக்கிறது என்பதை நான் எப்போதும் உணர்ந்திருந்தேன்." லைக்கன் ஸ்க்லெரோசஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு இன்னும் அதிகமான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று மோனிகா நம்புகிறார். "நோய் கண்டறியப்பட்ட பிறகும், உங்களுக்குத் தேவையான முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என்பது அவசியமில்லை. எனக்குக்கூட வழக்கமான பரிசோதனை செய்யப்படுவதில்லை" என்று அவர் கூறுகிறார். "ஸ்டீராய்டு கிரீமைப் பயன்படுத்தி நானாகவே இந்தப் பாதிப்பைக் கட்டுப்படுத்துகிறேன். எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறேன் என்று நம்புகிறேன்." தேசிய சுகாதாரச் சேவையின் இணையதளத்தின்படி, லைக்கன் ஸ்க்லெரோசஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் தெரியவில்லை. நோய் எதிர்ப்பு மண்டலம் தவறுதலாகத் தோலைத் தாக்கிச் சேதப்படுத்துவதால் இந்தப் பாதிப்பு ஏற்படக்கூடும். இது தொற்றக்கூடிய நோயல்ல. தொற்று காரணமாகவோ தனிநபர் சுகாதாரமின்மை காரணமாகவோ இந்தப் பாதிப்பு ஏற்படுவதில்லை. தோலில் உராய்வு ஏற்படுவது அல்லது தோல் சேதமடைவது இந்தப் பாதிப்பைத் தூண்டலாம் அல்லது அதை மேலும் மோசமாக்கலாம். கென்ட் பகுதியைச் சேர்ந்த 53 வயதான கிளேர் பாம்ஹவுர், தனது ஐந்து வயதில் முதன்முதலாக இந்த அறிகுறிகளை அனுபவித்தார். "எனக்குப் பிறப்புறுப்புப் பகுதியில் அரிப்பும் வலியும் இருந்தன. இதற்காக என்னை எப்போதும் திட்டுவார்கள். என்ன நடக்கிறது என்பதுகூட அப்போது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை." வயது வந்த பிறகு, அவரது அறிகுறிகள் மேலும் மோசமடைந்தன. தோலில் பிளவுகள், கொப்புளங்கள் மற்றும் புண்கள் ஏற்பட்டன. "ஆனால், மற்ற பெண்களின் பெண்ணுறுப்புகளை நீங்கள் பார்ப்பதில்லை என்பதால், என்னுடையது இயல்பானதாக இல்லை என்பது எனக்குத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்தில் நான் எட்டு முறை கருப்பை வாய் பரிசோதனையும் செய்துகொண்டேன். அப்போதும் யாரும் எதுவும் கூறவில்லை." 2016-ஆம் ஆண்டு, கிளேருக்கு ஏற்பட்ட தோல் கிழிசல் ஒன்று ஆறாமல் இருந்தது. "அந்த ஆண்டில் எனக்கு 43 வயது. 38 ஆண்டுகளாக இந்தப் பாதிப்புடன் வாழ்ந்துகொண்டிருந்தேன். அதற்கு மேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை." தனக்கு ஹெர்பீஸ் பாதிப்பு இருப்பதாகக் கூறிய பொது மருத்துவர், பாலியல் நல மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக கிளேர் கூறுகிறார். 25 ஆண்டுகளாகத் திருமண வாழ்க்கையில் இருந்த தனக்கு இவ்வாறு கூறப்பட்டது "அதிர்ச்சியாக" இருந்ததாக அவர் தெரிவித்தார். இறுதியில், பயாப்ஸி பரிசோதனைக்காக அவர் பரிந்துரைக்கப்பட்டார். அவருக்கு லைக்கன் ஸ்க்லெரோசஸ் பாதிப்பும் பெண்ணுறுப்புப் புற்றுநோயும் இருப்பது கண்டறியப்பட்டது. "லைக்கன் ஸ்க்லெரோசஸ் என்ற பாதிப்பைப் பற்றி நான் இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை. அதேபோல், இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டிராத ஒரு வகைப் புற்றுநோய், அதுவும் நான் இதுவரை கேள்விப்பட்டிராத ஓர் இடத்தில் இருப்பது தெரியவந்தது. வல்வா என்ற சொல்லை நான் முதன்முதலில் கேட்டது அப்போதுதான். எந்தவொரு மருத்துவ நிபுணரும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தியதில்லை. எனவே, அந்த நேரத்தில் இத்தனை விஷயங்களை ஒரே நேரத்தில் ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது." பெண்ணுறுப்புப் புற்றுநோயிலிருந்து மீண்டு, ஏழு ஆண்டுகளாக நோய் மீண்டும் ஏற்படாத நிலையில் இருந்த கிளேருக்கு, வழக்கமான பரிசோதனையின்போது புற்றுநோய் மீண்டும் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு பரிசோதனையில், புற்றுநோயாக மாறக்கூடிய ஆரம்பநிலை செல்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, அவருக்கு ஆறாவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. லைக்கன் ஸ்க்லெரோசஸ் பாதிப்பு தனக்கு முன்கூட்டியே கண்டறியப்பட்டிருந்தால், மூன்றாம் நிலையை எட்டுவதற்கு முன்பே தனது புற்றுநோய் கண்டறியப்பட்டிருக்கலாம் என்று கிளேர் நம்புகிறார். "நான் இரண்டு முறை கதிரியக்கச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் எனக்கு உடனடியாகவே முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டது. மேலும், நிணநீர் வீக்கம் மற்றும் நரம்புப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளன." உடலில் ஏதேனும் மாற்றங்களை அனுபவிக்கும் பெண்கள், அவற்றைப் பற்றித் தொடர்ந்து குறிப்பேட்டில் பதிவு செய்யுமாறு மோனிகா ஊக்குவிக்கிறார். "நமது உடல்களைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். குறிப்பாக, நமது அந்தரங்க உறுப்புகளில் எது இயல்பானது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், உண்மையில் நமது பெண்ணுறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உங்கள் பிரச்னைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றால், பல மருத்துவர்களிடம் கருத்துகளைக் கேளுங்கள். தொடர்ந்து மருத்துவர்களை அணுகிக்கொண்டே இருங்கள். ஏனெனில், பதில்கள் கிடைக்காமல் நீங்கள் வாழ வேண்டிய அவசியமில்லை." என்றார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை