பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி இன்றைய டிஜிட்டல் உலகம் பற்றி கூறியிருப்பதாவது... பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி - AFP பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி நேர்காணலில் இன்றைய டிஜிட்டல் உலகம் மக்களைத் தனிமைப்படுத்துகிறது என்றும் திரையரங்கம் மக்களை ஒன்றிணைக்கிறது எனவும் கூறியுள்ளார். ஹிந்தியில் ராக்ஸ்டார், ஹைவே, தமாஸா ஆகிய படங்களின் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றவர் இயக்குநர் இம்தியாஸ் அலி. காதல் படங்களுக்கென மிகவும் புகழ்பெற்றவர் என்பது கவனிக்கத்தக்கது. கடைசியாக இம்தியாஸ் அலி இயக்கத்தில் கடந்த ஜூனில் மெய்ன் வாபஸ் ஆவுங்கா என்ற படம் வெளியானது. நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் சுமார் ரூ.100 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ஏக்தா கபூர் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார். மும்பையில் திரைப்பட விழாவில் பங்கேற்ற இம்தியாஸ் அலி பிடிஐக்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பதாவது: கோவிட் தொற்றுக்குப் பிறகு பார்வையாளர்களின் மனநிலை மாறிவிட்டது. இன்று மக்கள் அதிகளவு பார்க்கிறார்கள். அதனால், திரைத்துறையிலும் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. முன்பைவிட இப்போது நாம் 10 மடங்கு அதிகமாக பார்க்கிறோம். ரீல்ஸ், கதைகள் என வெவ்வெறு வடிவத்தில் அதனை நுகர்கிறோம். ஆனால், இந்த விஷயங்களை நாம் பார்ப்பது ஒன்று செல்போனில் பார்க்கிறோம் அல்லது வேறு ஒரு கருவியில் பார்க்கிறோம். இது நம்மை தனிமைப்படுத்துகிறது. ஒரு உணர்ச்சியை அனுபவிக்கும்போது என்னைச் சுற்றி இருப்பவர்களும் அதே மாதிரி அனுபவிப்பதைப் பார்ப்பது அழகாக இருக்கும். ஏனெனில், மனிதர்கள் தனித்து வாழ உருவாக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் டிஜிட்டல் உலகம் நம்மை தனிமைப்படுத்துகிறது. திரையரங்கின் நன்மை என்னவென்றால் மக்களின் ஒருங்கிணைந்த அனுபவத்தைக் கொடுக்கிறது. ஒரு படம் எப்படி வெற்றியடைகிறது என்பதற்கான ரகசியம் என்னிடம் இல்லை. ஆனால், படங்கள் திரையரங்கில் பார்ப்பதற்கு ஏதுவானது என்று நினைக்கிறேன். அதுதான் ’மெய்ன் வாபஸ் ஆவுங்கா’ படத்திற்கும் நடந்தது. இந்தப் படத்திலிருந்து நாங்கள் கற்றது என்னவென்றால், இயக்குநருக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே நேரடியான ஒரு தொடர்பு வேண்டும். ஒவ்வொரு இயக்குநரும் கலைஞர்களும் மக்களுடன் இணைந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவரவர்கள் அந்தந்த துறையில் அதிகமாக சாதிக்க முடியும். அப்படி இல்லை என்றால், நாம் இருட்டியில் குறி வைக்கிறோம் என்று அர்த்தமாகிவிடும். அதனால்தான் சில நேரங்களில் நமது படைப்புகள் சரியான இலக்கை அடைவதில்லை. தற்போதைக்கு ஒரு கதை எழுதி வருகிறேன். அது ரொமாண்டிக் கதையா? அல்லது நடப்பு உலகைப் பற்றியதா என இன்னும் முடிவாகவில்லை எனக் கூறியுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களைத் தனிமைப்படுத்தும் டிஜிட்டல் உலகம்: இம்தியாஸ் அலி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗