கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே மமதா பானர்ஜியை நேரில் சந்தித்தது குறித்து... மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே. - படம் - எக்ஸ் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தில்லியில் சனிக்கிழமை (அக். 31) நேரில் சந்தித்தார். கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்தும் இடமாக இருந்த ஜந்தர் மந்தரில் இனிமேல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை எனவும் அதற்கு மாற்று இடங்களையும் தில்லி காவல்துறை அண்மையில் அறிவித்தது. இந்தத் தடையை மீறி ஜந்தர் மந்தருக்குள் நுழைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். சௌரவ், அசுதோஷ் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டபோது, பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவுக் குரல் கொடுக்க, மமதா பானர்ஜி அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தார். இந்த நிலையில், தில்லியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜியின் இல்லத்தில் மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே அவருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் போராட்டத்துக்கு அபிஜீத் தீப்கே தனது ஆதரவை மமதாவிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗