மணல் குவாரி முறைகேடு: திருச்சியில் 4 அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
மணல் குவாரி முறைகேடு: திருச்சியில் 4 அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

படம்: ர.செல்வமுத்துகுமார் திருச்சி: தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, திருச்சியில் உள்ள 4 அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் அளவுக்கு மீறி மணல் அள்ளி பல ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அமலாக்கத் துறை புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, திருச்சி காஜாமலை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே உள்ள கனிமவளத்துறை கண்காணிப்பு பொறியாளர் குமரவேல் வீடு, ரேஸ்கோர்ஸ் சாலை மத்திய மண்டல காவல் துறை தலைவர் அலுவலகம் அருகே உள்ள நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர்கள் சுகுமாரன், ஜெயக்குமாரி ஆகியோர் வீடுகளில் சென்னையை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், திருச்சி காஜாமலை காலனி பகுதியில் உள்ள பொதுப்பணித் துறை நீர்வள ஆதார பிரிவு உதவி பொறியாளர் சாதிக் பாஷா வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை சற்றுமுன் நிறைவு பெற்றது. அவரது வீட்டில் இருந்து இரண்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஹேமச்சித்ரா தெரிவித்தார். தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நடத்தி வரும் அதிரடி சோதனை, அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை