மதபோதகருக்கான மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி மனு: நவ.5-க்கு விசாரணை ஒத்திவைப்பு

📅 📍 Tirunelveli, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மதபோதகருக்கான மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி மனு: நவ.5-க்கு விசாரணை ஒத்திவைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மத போதகருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை நவ.5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மத போதகருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை நவ.5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் ஆபிரகாம் (53). மத போதகரான இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு மத பிரசாரத்துக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 சிறுமிகள் உள்பட 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஊரக உள்கோட்ட மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆபிரகாமை கைது செய்தனா். இதையடுத்து, ஆபிரகாம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவருக்கு மரண தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த நிலையில், ஆபிரகாமுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் காவல் துறை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், ஆபிரகாம் தரப்பு குற்றச்சாட்டுகளை வழக்குரைஞா் மூலமாகத் தெரிவிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம். நிா்மல்குமாா், என். குணசேகரன் அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீதான விசாரணையை வருகிற நவ.5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனா். 3 வழக்குரைஞா்கள் நியமனம்: உயா்நீதிமன்றங்களுக்கு வரும் மரண தண்டனை உறுதிப்படுத்தல் வழக்குகளில், சட்டப் பணிகள் ஆணைக்குழு சம்பந்தப்பட்ட கைதிக்கு என்று ஒரு பிரத்யேக சட்டக் குழுவை நியமிக்க வேண்டும். இந்த சட்டக் குழுவில் ஒரு மூத்த வழக்குரைஞா், குற்றவியல் துறையில் குறைந்தது 7 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இரு வழக்குரைஞா்கள் இடம் பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியது. இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட மதபோதகா் ஆபிரகாம் தரப்பு வாதங்களை முன்வைக்க மூத்த வழக்குரைஞா் காந்தி, வழக்குரைஞா்கள் கமாலினி, ராமசாமி ஆகியோா் நியமனம் செய்யப்பட்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை