மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் டிரேட்ஸ்மேன் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் டிரேட்ஸ்மேன் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?

மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் டிரேட்ஸ்மேன் வேலைக்கு விண்ணப்பிப்பது குறித்து... மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் டிரேட்ஸ்மேன் வேலை - கோப்புப்படம் மத்திய அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனம் ஐஆர்இஎல் (இந்தியா) லிமிடெட். மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் இல்மனைட், ரூட்டைல், சிர்கான், சில்லிமனைட், கார்னெட் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்காக, சாவரா (கேரளம்), மணவாளக்குறிச்சி (தமிழ்நாடு) மற்றும் ஒரிசா மணல் வளாகம்(ஒடிசா) ஆகிய இடங்களில் தனது கனிம மணல் அகழ்வு மற்றும் கனிம பதப்படுத்தும் ஆலைகளை இயக்கி வருகிறது. சுமார் 11,000 டன் அரிய மண் செறிவூட்டியை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஒரு அரிய மண் பிரித்தெடுப்பு ஆலை மற்றும் ஆக்சைடு/சேர்மங்கள் வடிவில் சுத்திகரிக்கப்பட்ட அரிய மண்ணை உற்பத்தி செய்வதற்காக ஆலுவாவில் உள்ள ரெட்-இல் ஒரு உயர் தூய அரிய மண் ஆலையை ஒடிசாவில் அமைத்துள்ளது. ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் ஒரு புதிய கனிம மணல் அகழ்வு மற்றும் கனிம பதப்படுத்தும் ஆலையை அமைப்பதற்காக, ஒடிசா தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்துடன் ஒரு கூட்டு முயற்சியை அமைத்துள்ளது. மேலும், நிறுவனத்தின் வரவிருக்கும் மதிப்புமிக்க திட்டங்களில் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் 'ரேர் எர்த்' மற்றும் 'டைட்டானியம்' கருப்பொருள் பூங்கா அமைக்கவுள்ளது. இந்த நிலையில், ஐஆர்இஎல் நிறுவனம் டிரேட்ஸ்மேன் நிரந்தரப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் வாய்ந்த இந்திய இளைஞர்களிமிருந்து வரும் நவ.13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அது குறித்து பார்ப்போம்.. வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். CO/HRM/36/2026 பணி: Tradesman Trainee காலியிடங்கள்: 93 பிரிவு: Electrician காலியிடங்கள்: 12 பிரிவு: Instrumentation பிரிவு: Attendent Operator(Chemical Plant) காலியிடங்கள்: 20 தகுதி: பிட்டர், எலெக்ட்ரிசின், இன்ஸ்ட்ரூமென்டேசன், கெமிக்கல் பிளான்ட் ஆகிய பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.22,000 - 88,000 வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது ஊக்கத்தொகையாக மாதம் ரூ.34,200 வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.826, இதர பிரிவினர்களுக்கு ரூ.354. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: https://www.irel.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.11.2026 விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை