மது போதையில் மகன் வெறிச்செயல்: தாய் அடித்துக் கொலை

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மது போதையில் மகன் வெறிச்செயல்: தாய் அடித்துக் கொலை

தருமபுரியில் மது போதையில் மகன், தாயை அடித்துக் கொலை செய்த சம்பவம் குறித்து... மது போதையில் மகன் வெறிச்செயல்: தாய் அடித்துக் கொலை - கோப்புப்படம் தருமபுரி: தருமபுரியில் மது போதையில் மகன், தாயை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டம், பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தன்(50). கட்டட மேஸ்திரி. இவரது மனைவி சின்னபாப்பா (45). இவர்களது மகன் தேவராஜ் (19). சிறுவயதிலேயே மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையான தேவராஜ், அண்மையில் சில குற்ற வழக்குகள் தொடர்பாக கைதாகி பிணையில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு போதையில் வீட்டுக்கு வந்த அவர் தனது தாயாரிடம் தகராறு செய்துள்ளார். செலவுக்கு பணம் கேட்டு தாயார் தரவில்லை என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், போதை வெறியில் ஆத்திரம் தலைக்கேறிய தேவராஜ் இரும்பு பட்டையை எடுத்து தாயாரை சரமாரியாக தாக்கியும் குத்தியும் தாக்கியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், சென்று பார்த்தபோது சின்ன பாப்பா இறந்து கிடந்துள்ளார். அருகில் பட்டை கம்பியுடன் நின்றுள்ளார் தேவராஜ். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த இண்டூர் காவல் நிலைய போலீசார், சின்னபாப்பா உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து, தேவராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயை மது போதை வெறியில் மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை