மதுபாட்டில்கள் விலை ரூ.10 உயர்வா? - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
மதுபாட்டில்கள் விலை ரூ.10 உயர்வா? - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

அமைச்சர் விக்னேஷ்| கோப்புப் படம் கோவை: “மது பாட்டில்களின் ரூ.140 விலையுடன், பாட்டிலை திரும்பத் தருவதற்கான ரூ.10 தொகையும் சேர்த்து எம்ஆர்பியிலேயே ரூ.150 என வந்துவிடும். இனி பாட்டில்களை திரும்பக் கொடுத்துவிட்டு ரூ.10 பெற்றுக் கொள்ளலாம். திரும்ப வராத பாட்டில்களின் தொகை அரசுக்கு சென்றுவிடும். முன்பு என்ன விலையோ அதே விலைக்குத்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறது, விலையேற்றம் ஏதுமில்லை” என அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், “கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலின் விலை ரூ.140 என வைத்துக் கொள்வோம். அதனை திருப்பித் தருவதற்காக கூடுதலாக ரூ.10 வாங்கினார்கள். மேலும் கட்சி நிதி என்ற பெயரில் ரூ.10 வாங்கினார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் கட்சி நிதியாக ரூ.10 வாங்குவதை ஒழித்தோம். அதன் பின்னர் ரூ.140 மற்றும் பாட்டிலுக்கு ரூ.10 என ரூ.150 வாங்குகிறார்கள். இதில் பாட்டிலை திரும்பக் கொடுக்கும்போது மீண்டும் ரூ.10 வழங்கப்படும். இதில் என்னவென்றால், 100 பாட்டில்கள் விற்பனையானால், அதில் 50 பாட்டில்கள் மட்டுமே திரும்ப வருகிறது. ஆனால், 99 சதவீத பாட்டில்கள் வந்துவிட்டதாக கணக்கு காட்டுகிறார்கள். இந்தப் பணம் யாருக்கோ செல்கிறது. இதுவே, செந்தில் பாலாஜியாகவோ அல்லது வேறு யாராகவோ இருந்திருந்தால், இந்தப் பணம் அவர்களுக்கு போயிருக்கும். நாங்கள் மக்கள் பணம் மக்களுக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறோம். இல்லையென்றால் ஏன் இவ்வளவு போராட்டம் நடக்கவிட வேண்டும். நேற்றிலிருந்து டாஸ்மாக் தான் பெரிய பிரச்சினை போன்று எல்லோரும் அதனையே லைவ் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். டாஸ்மாக்கில் பாட்டில்களை திரும்ப வாங்கும்போது, இத்தனை பாட்டில்களை திரும்பப் பெற்றேன் என ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். இந்த பாட்டில் விஷயத்தில் கூடுதலாக கணக்கு காட்டி மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. இப்போது 50 - 55 சதவீத பாட்டில்கள் தான் வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்ப வருகிறது, ஆனால் கூடுதலாக வருவதாக கணக்கு காட்டி ஊழல் செய்கிறார்கள். இதனால் தான் இனி பாட்டில்களின் ரூ.140 விலையுடன், பாட்டிலை திரும்பத் தருவதற்கான ரூ.10 தொகையும் சேர்த்து எம்ஆர்பியிலேயே ரூ.150என வந்துவிடும். இனி பாட்டில்களை திரும்ப கொடுத்துவிட்டு ரூ.10 பெற்றுக் கொள்ளலாம். திரும்ப வராத பாட்டில்களின் தொகை அரசுக்கு சென்றுவிடும். முன்பு என்ன விலையோ அதே விலைக்குத்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறது, விலை ஏறவில்லை. பாட்டிலை திரும்பத் தந்தால் கொடுக்கப்படும் ரூ.10-ஐ எம்ஆர்பியில் சேர்த்துள்ளோம். பாட்டில்களை திரும்பப் பெறும் இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தவுடன், தமிழகத்தில் எந்த ஊரில் வாங்கிய பாட்டிலையும் எங்கும் செலுத்தி பணம் பெறலாம். பாட்டில்கள் இனி சாலையில் எங்கும் கிடந்தால் அதனை எடுத்து ரூ.10 பெற்றுக் கொள்வார்கள், இது பலருக்கு வாழ்வாதாரமாகும். சுற்றுச்சூழலும் காக்கப்படும். இது புரியாமல் சிலர் விமர்சனம் செய்வது கஷ்டமாக உள்ளது” என்றார்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை