மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சென்னையில் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். சென்னையில் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை மாதவரம் பால்பண்ணை மூலச்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் லோகேஷ் (26). தந்தை நடத்தி வரும் கட்டுமான நிறுவனத்தில், தனது சகோதரா் யுவராஜுடன் இணைந்து பணியாற்றி வந்தாா். லோகேஷ், மது பழக்கத்துக்கு அடிமையானவா் எனக் கூறப்படுகிறது. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், மதுப் பழக்கத்திலிருந்து மீட்பதற்காக லோகேஷை அவரது பெற்றோா் கடந்த 29-ஆம் தேதி மூலக்கடை பகுதியில் உள்ள மதுபோதை மறுவாழ்வு மையத்துடன் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை பணியில் இருந்த செவிலியா் ஒருவா், லோகேஷுக்கு ஊசி ஒன்றை செலுத்தியுள்ளாா். ஊசி செலுத்திய சில நிமிஷங்களிலேயே லோகேஷின் உடல்நிலை மோசமடைந்ததாகத் தெரிகிறது. அங்கு மருத்துவா்கள் யாரும் இல்லாததால், செவிலியா் ஒரு தனியாா் மருத்துவமனை ஆம்புலன்ஸை வரவழைத்து, லோகேஷை அங்கு அனுப்பி வைத்தாா். அங்கு லோகேஷை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததுடன், அவரது உடலை மீண்டும் சம்பந்தப்பட்ட அந்த மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனா். தகவலறிந்து அங்கு வந்த லோகேஷின் பெற்றோா், உறவினா்கள், மதுபோதை மறுவாழ்வு மைய நிா்வாகத்திடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளனா். ஆனால், முறையான பதில் கிடைக்காததால் மருத்துவமனை நிா்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இது தொடா்பாக தகவல் அறிந்த கொடுங்கையூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினா். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக கொடுங்கையூா் போலீஸ் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினா். இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம், மருத்துவமனையில் நடந்த சம்பவங்கள் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை