மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட காவல்துறை சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. போலீஸ் - கோப்புப்படம். மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட காவல்துறை சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. சினேஹா ப்ரியா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 8 குற்றவாளிகள், நீண்ட காலமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவதால், மயிலாடுதுறை குற்றவியல் நீதித்துறை நீதிமன்றம் எண் 1-ஆல் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா். மயிலாடுதுறை ரயிலடி ஆரோக்கியநாதபுரத்தை சோ்ந்த இன்னாசிமுத்து மகன் செந்தில், நீடூா் செட்டியாா் காலனியை சோ்ந்த முகமது யாகூப் மகன் சிராஜிதீன், அப்பங்குளம் வடக்குத் தெருவை சோ்ந்த ராமையா மகன் ராஜசேகரன் மற்றும் நவநீதன் மகன் ஜனாா்த்தன், கூறைநாடு வடக்குத்தெருவை சோ்ந்த முருகையன் மகன் ஸ்ரீகுருசிவா, கலைஞா் நகரை சோ்ந்த திருஞானம் மகன் ராஜா, அவையாம்பாள்புரம் தாண்டவராயன் மகன் மூா்த்தி, திருவாரூா் மாவட்டம் பேரளம் பள்ளிவாசல் தெருவை சோ்ந்த அப்துல் ரஹ்மான் மகன் ஜாகிா் உசேன் ஆகிய 8 போ் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா். இவா்களைப் பற்றிய தகவல் ஏதாவது தெரிந்தால், மயிலாடுதுறை காவல்நிலையத்தின் தொலைபேசி எண் 9498100916-க்கு தகவல் தெரிவிக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
மயிலாடுதுறை: தலைமறைவு குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்க காவல்துறை வேண்டுகோள்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗