மெட்ராஸ் ஐஐடி-ல் கற்பித்தல் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி குறித்து... மெட்ராஸ் ஐஐடி - கோப்புப்படம் மெட்ராஸ் ஐஐடி-ல் கற்பித்தல் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரம் வருமாறு: பணி :Teaching Programme Coordinator சம்பளம் : மாதம் ரூ.45,000 தகுதி: சுற்றுச்சூழல், அறிவியல், பொருளாதாரம், மேலாண்மை போன்ற ஏதாவதொரு பாடப்பிரி வில் இளநிலை பட்டம் / முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படை யில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு குறித்த விபரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்விற்கு வரும் போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். நேர்முகத்தேர்வின்போது விண்ணப்பத்தாரரின் கல்வித்துறை சார்ந்த பணி அனுபவம், கூடுதல் கல்வித்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் முன்னுரிமைத் தரப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மெட்ராஸ் ஐஐடி-ன் "Center for Outreach and Digital Education" மையத்தில் Programme Coordinator ஆக பணியமர்த்தப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: www.icandsr.iitm.ac.in/careers என்ற இணையதளத்தில் கொடுக்கப் பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் ஆன்லைன் முறையில் 29.10.2026 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மெட்ராஸ் ஐஐடி-ல் கற்பித்தல் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி