புதுச்சேரி கடற்கரை சாலையில் மின்விளக்குக் கம்பம் உடைந்து விழுந்ததில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவியை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி கடற்கரை சாலையில் மின்கம்பம் விழுந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன். புதுச்சேரி கடற்கரை சாலையில் மின்விளக்குக் கம்பம் உடைந்து விழுந்ததில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவியை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த தஸ்லீன்-ரிஹானா தம்பதியினா் கடந்த 12 ஆண்டுகளாக புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் தங்கி, கடற்கரை சாலையில் அலங்கார விளக்கு உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். இவா்களின் மகன் பைஜல் (7). கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி தாய் ரிஹானாவுடன் பைஜல் கடற்கரை சாலைக்கு வந்திருந்தாா். அங்கு அவா் விளையாடிக் கொண்டிருந்தபோது துருப்பிடித்த மின்கம்பம் உடைந்து அவா் மீது விழுந்தது. இதில் சிறுவன் உயிரிழந்தாா். பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு புதுச்சேரி மாநில அதிமுக செயலரும், சட்டப்பேரவை தற்காலிகத் தலைவருமான ஆ.அன்பழகன் அரசு நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும் என முதல்வா் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தாா். அதை ஏற்று சிறுவனின் குடும்பத்துக்கு முதல்வா் என்.ரங்கசாமி ரூ.5 லட்சம் நிதியுதவியை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வியாழக்கிழமை வழங்கினாா். இந்நிகழ்வின்போது, சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன் உடனிருந்தாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் கம்பம் விழுந்து இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗