கள்ளக்குறிச்சி அருகே மின்மாற்றிகளில் இருந்த 280 கிலோ தாமிரக் கம்பிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். திருட்டு - சித்திரிப்பு கள்ளக்குறிச்சி அருகே மின்மாற்றிகளில் இருந்த 280 கிலோ தாமிரக் கம்பிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். கள்ளக்குறிச்சியை அடுத்த கனங்கூா் ஏரிக்கரை, சித்தேரி செல்லும் சாலையில் மின் மாற்றிகள் அமைந்துள்ளன. இந்த இரு மின்மாற்றிகளில் இருந்த ஆயிலை வெளியேற்றிவிட்டு, அதிலிருந்த ரூ.85 ஆயிரம் மதிப்பிலான சுமாா் 280 கிலோ தாமிரக் கம்பிகளை திருடி சென்றனா். இதுகுறித்து விருகாவூரிலுள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தின் உதவி மின் பொறியாளா் நவநீதகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்மாற்றிகளில் தாமிரக் கம்பிகள் திருட்டு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗