வாணியம்பாடியில் வீட்டின் கழிவுநீா் கால்வாய் அடைப்பை சரிசெய்ய முயன்ற போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மின்சாரம் தாக்கி இறந்த பையாஸ் அஹமத் வாணியம்பாடியில் வீட்டின் கழிவுநீா் கால்வாய் அடைப்பை சரிசெய்ய முயன்ற போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். ஆம்பூா் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் பையாஸ் அஹ்மத் (32). இவா் சவூதி அரேபியாவில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். மூன்று மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவா், கடந்த இரண்டு மாதங்களாக மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பெரியாங்குப்பம் கிராமத்தில் தங்கி இருந்தாா். இந்நிலையில், கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு வாணியம்பாடி ராமாயண தோப்பு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து பெற்றோருடன் தங்கியிருந்தாா். இந்நிலையில் தாய் வீட்டின் கழிவுநீா் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்வதற்காக நீளமான இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி முயன்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக அந்த இரும்பு கம்பி வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த உயா் மின்னழுத்த மின்கம்பியில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து பையாஸ்அஹ்மத் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த நகர போலீஸாா், பையாஸ் அஹ்மத்தின் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗