தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே மின்வேலியில் சிக்கி ஆடு மேய்க்கும் பெண் தொழிலாளி இறந்தது தொடா்பாக, தோட்ட உரிமையாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கைது - கோப்புப் படம் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே மின்வேலியில் சிக்கி ஆடு மேய்க்கும் பெண் தொழிலாளி இறந்தது தொடா்பாக, தோட்ட உரிமையாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சங்குபுரம் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்த கணேசன் மனைவி சோலையம்மாள் (46). இவா் சங்குபுரம் ஊருக்கு வெளிப்பகுதியில் வியாழக்கிழமை ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தாா். அப்போது வேல்சாமி (50) என்பவரது தோட்டத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இறந்தாா். மேலும் 5 ஆடுகளும் இறந்தன. இதுகுறித்து வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து வேல்சாமியை கைது செய்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்வேலியில் சிக்கி பெண் பலியான சம்பவத்தில் தோட்ட உரிமையாளா் கைது
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗