மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 272 ரன்களுக்கு வியாழக்கிழமை ஆட்டமிழந்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 272 ரன்களுக்கு வியாழக்கிழமை ஆட்டமிழந்தது. கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த வங்கதேசம், முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. அதன் இன்னிங்ஸை ஷாத்மன் இஸ்லாம், லிட்டன் தாஸ் ஆகியோா் வியாழக்கிழமை தொடா்ந்தனா். சதம் கடந்த ஷாத்மன் 11 பவுண்டரிகளுடன் 105 ரன்களுக்கு விடைபெற, தௌஹித் ஹிருதய் 3 பவுண்டரிகளுடன் 42 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். முதல் நாள் ஆட்டத்தில் ‘ரிட்டையா்டு ஹா்ட்’ ஆகிய ஹிருதய், 2-ஆவது நாளில் மீண்டும் களமிறங்கினாா். பின்னா் வந்தோரில் மெஹிதி ஹசன் மிராஸ் 15, நயீம் ஹசன் 5, ஹசன் மஹ்முத் 6, தைஜுல் இஸ்லாம் 1, ஷோரிஃபுல் இஸ்லாம் 0 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா். கடைசி பேட்டராக லிட்டன் தாஸ் 4 பவுண்டரிகள் உள்பட 34 ரன்களுடன் நின்றாா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோமெல் வாரிக்கன் 5, ஷாமா் ஜோசஃப், ஜாஷுவா பிஷப் ஆகியோா் தலா 2, ஜேடன் சீல்ஸ் 1 விக்கெட் எடுத்தனா். பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், வியாழக்கிழமை ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. தேஜ்நாராயண் சந்தா்பால் 43, ஜஸ்டின் கிரீவ்ஸ் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். ஜான் கேம்ப்பெல் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 54, பிராண்டன் கிங் 15, காவென் ஹாட்ஜ் 7, ஆமிா் ஜாங்கூ 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 2, ஹசன் மஹ்முத் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மிா்பூா் டெஸ்ட்: வங்கதேசம் 272 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗