மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள டிரெயின் படத்தின் ரீலீஸ் டீசர் வெளியானது. விஜய் சேதுபதி - ஷ்ருதி ஹாசன் - நாசர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள டிரெயின் படத்தின் ரீலீஸ் டீசர் வெளியானது. இயக்குநர் மிஷ்கின் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் டிரெயின். முழுவதும் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்ட த்ரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யூகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிஷ்கின் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். நீண்ட நாள்களாக வெளியாகாமல் இருந்த இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சமீபத்தில் படக்குழுவினர் அறிவித்தனர். இந்த நிலையில், டிரெயின் படத்தின் ரிலீஸ் டீசர் இன்று வெளியாகியுள்ளது. அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பத்தா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், டிரெயின் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மிஷ்கினின் டிரெயின் - ரிலீஸ் டீசர்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗