மோகன்லாலின் 368ஆவது படத்தின் முதல் பார்வை போஸ்டர்..! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மோகன்லாலின் 368ஆவது படத்தின் முதல் பார்வை போஸ்டர்..! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

நடிகர் மோகன்லால் நடிக்கும் அவரது 368ஆவது படத்தின் படப்பிடிப்பு குறித்து... மோகன்லாலின் 368ஆவது படத்தின் முதல் பார்வை போஸ்டர் - படம்: எக்ஸ் / மோகன்லால் மலையாள நடிகர் மோகன்லால் நடிக்கும் அவரது 368ஆவது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று (அக்.30) தொடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள இயக்குநர் சத்தியன் அந்திகாட் அவர்களின் மகன் அனூப் சத்யன் உடன் இணைந்து தனது 368ஆவது படத்தில் மோகன்லால் நடிக்கிறார். இதற்கான பூஜை தொடங்கியுள்ளது. அனூப் சத்யன் இயக்கத்தில் முன்னதாக வரண அவஷ்யமுண்ட், ஐசியு ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. ஆசீர்வாத் சினிமாஸ் சார்பாக இந்தப் படத்தை பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு தற்காலிகமாக ’எல்368’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. லாலேட்டன் என்பதன் சுருக்கமாக எல் என்ற எழுத்து பயன்படுத்தப்படுகிறது. படக்குழுவுடன் இருக்கும் புகைப்படங்களை மோகன்லால் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இத்துடன் படத்தின் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகியுள்ளது. கடலோரத்தில் மோகன்லால் இரண்டு குழந்தைகளுடன் விளையாடும்படியான காட்சி ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. கடைசியாக மோகன்லால் அவரது மகளின் துடக்கம் படத்திலும் ரஜினியின் ஜெயிலர் 2 படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். விரைவில் தருண் மூர்த்தி இயக்கியுள்ள அதிமனோகரம் திரைக்கும் வரவிருக்கிறது. #L368 Pooja Ceremony pic.twitter.com/vRCzTgE6ob #L368 pic.twitter.com/bhEyMA2mj8 தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை