வீட்டு உபயோகப்பொருள்களின் விலை 3 - 7% வரையிலும் பாரம்பரிய இனிப்புகளின் விலை 15% வரையிலும் அதிகரித்துள்ளது. வீட்டு உபயோகப் பொருள்களின் விலை உயர்வு, இனிப்புகளின் விலை ஏற்றம் ஆகியவை மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் தீபாவளி பரிசு என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்புகள், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். ஆனால், இப்பொருள்களின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கடுமையாக அதிகரித்துள்ளது. வீட்டு உபயோகப்பொருள்களின் விலை 3 முதல் 7 சதவீதம் வரையிலும் பாரம்பரிய இனிப்புகளின் விலை 15% வரையிலும் அதிகரித்துள்ளது. ஹையர், எல்ஜி, புளூஸ்டார் நிறுவனங்களின் தயாரிப்புகள் 7% வரை உயர்ந்துள்ளன. குறிப்பாக ஸ்மார்ட் டிவி, குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளன. மூலப்பொருள்களின் விலை உயர்வு, விளைச்சல் பாதிப்பு, சரக்கு கட்டணச் செலவுகள் இந்த விலை உயர்வுக்கு காரணமாகப் பார்க்கப்படுகின்றன. தீபாவளியையொட்டி விற்பனைகள் அதிகரிக்கும் நேரத்தில் இந்த விலையேற்றமானது நடுத்தர குடும்பத்தினரை கடுமையாக பாதிக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில், இந்த விலையேற்றமானது தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பரிசு என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. Modi's Diwali gift: Inflation at every doorstep! pic.twitter.com/HkZy4La2eI தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗