நடுவானில் பறந்த இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ விமானம் - கோப்புப் படம் நடுவானில் பறந்த இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தில்லியிலிருந்து புனே சென்ற இண்டிகோ விமானத்தின் கதவை வானில் பறக்கும்போதே திறக்க முயன்றதாகக் கூறப்படும் நிலையில், சக பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாகக் கூறி 33 வயது ஆண் பயணி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் கதவைத் திறக்க முயன்றபோது, அதன் மின்னணு சென்சார் செயல்படத் தொடங்கியுள்ளது. இது விமானத்தில் இருந்த பணியாளர்களுக்கு மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நள்ளிரவு 12:26 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் 6E 6884, புறப்பட்ட 20 நிமிடங்களுக்குள்ளேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இண்டிகோ விமானத்தின் ஏர்பஸ் A321 ரக விமானமான இதில், 200-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அவசரகால வெளியேறும் கதவுக்கு அருகிலிருந்த இருக்கையான 19D இல் அமர்ந்திருந்த கௌரவ் சத்யேந்திர ரௌடேலா, அந்தக் கதவின் கைப்பிடியை மூடியிருந்த பாதுகாப்பு உறையைத் பிடித்து திறக்க முயன்றுள்ளார். பிளாஸ்டிக்கால் ஆன இந்த பாதுகாப்பு உறை, பயணிகள் தவறுதலாகக் கதவின் கைப்பிடியின் மீது மோதினால், கதவு திறக்கும் இயக்கத்தை செயல்படக் கூடாது என்பதற்காக வடிவமைக்கப்பட்டது. இது செயல்படத் தொடங்கினால் அது விமானியின் அறைக்கும் பயணிகள் பகுதிக்கும் எச்சரிக்கை சமிக்ஞையை அனுப்பிவிடும். இதுதொடர்பாக, இண்டிகோ நிறுவனத்தின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் புகாரின் பேரில் புனே விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், விமானத்தில் இருந்த மற்ற பயணிகளின் உயிருக்கும் பாதுக்கப்பிற்கும் ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்தே அவர் கதவைத் திறக்க முயன்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நடுவானில் பறந்த விமானத்தின் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗