மூக்குத்தி அம்மன் - 2 இதுவரை சந்திக்காத உழைப்பு: சுந்தர். சி

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மூக்குத்தி அம்மன் - 2 இதுவரை சந்திக்காத உழைப்பு: சுந்தர். சி

மூக்குத்தி அம்மன் - 2 குறித்து சுந்தர். சி பேச்சு... இயக்குநர் சுந்தர். சி மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகைகள் நயன்தாரா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் வருகிற நவ. 6 ஆம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், இதன் முன்வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், சுந்தர். சி, குஷ்பு, ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வழக்கம் போல், நடிகை நயன்தாரா நிகழ்வில் பங்கேற்கவில்லை. நிகழ்வில் பேசிய இயக்குநர் சுந்தர். சி, “மூக்குத்தி அம்மன் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. படத்தின் பெயர், வேல்ஸ் தயாரிப்பு, நடிகைகள் நயன்தாரா, ஊர்வசி ஆகிய விஷயங்கள் மட்டுமே தொடர்புடையவை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். நான் வேறு எந்தத் திரைப்படங்களுக்கும் இப்படி உழைத்தது இல்லை. அப்படியொரு உழைப்பு. இப்படத்திற்காக நடிகை நயன்தாரா விரதம் இருந்து நடித்தார். இவ்வளவு பெரிய நட்சத்திரம் இப்படியெல்லாம் செய்வார்களா என ஆச்சரியமாக இருந்தது. படம் நல்லபடியாகத் தொடங்க வேண்டும் என பொள்ளாச்சியிலுள்ள மாசாணியம்மன் கோவில் சென்று வேண்டுதலும் செய்தார். நடிகைகள் ரெஜினா கேஸண்ட்ரா மற்றும் ஊர்வசி ஆகியோரும் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர். என் தம்பி ஹிப்ஹாப் ஆதியின் இசை மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் உள்பட சிலர் ஆதியின் இசையைப் பாராட்டினர். வழக்கமான அம்மன் திரைப்படம் என்றால் குழந்தையை, ஊரைக் காப்பாற்றும் கதையாக இருக்கும். ஆனால், மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் அம்மன் தன்னையே காப்பாற்றும் கதையாக உருவாகியுள்ளது. இதுதான் இதன் சிறப்பு. டிரைலரை பார்த்துவிட்டு கிராபிக்ஸ் சரியில்லை என விமர்சனங்கள் எழுந்ததைக் கவனித்தேன். தமிழகத்தைச் சேர்ந்த 400 விஎப்எக்ஸ் கலைஞர்கள் இப்படத்திற்காகப் பணியாற்றியுள்ளனர். திரைப்படத்தைப் பார்க்கும்போது நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். சரியில்லை என்றால் தட்டிக்கொடுத்து கூறுங்கள்; கற்றுக்கொள்கிறோம். இந்த தீபாவளிக்கு அம்மனின் அருளோடு அனைவரது வாழ்க்கையும் செழிக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை