மூக்குத்தி அம்மன் - 2 திரைப்பட டிரைலர்... மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அம்மனாக நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய்,ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். இதில், பெண் காவலரான நாயகி நயன்தாரா ஒரு பிரச்னையில் சிக்கிக்கொள்ள எப்படி அம்மனால் (நயன்தாரா) காப்பாற்றப்படுகிறார் என்கிற கதையாக உருவாகியுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மூக்குத்தி அம்மன் - 2 டிரைலர்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗