கோவிலில் வேண்டுதல் செய்த நயன்தாரா... நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படத்திற்காக காளிகாம்பாள் கோவிலில் வேண்டுதல் செய்துள்ளார். இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகைகள் நயன்தாரா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் வருகிற நவ. 6 ஆம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. இப்படம் குறித்து பேசிய இயக்குநர் சுந்தர். சி, “மூக்குத்தி அம்மன் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. படத்தின் பெயர், வேல்ஸ் தயாரிப்பு, நடிகைகள் நயன்தாரா, ஊர்வசி ஆகிய விஷயங்கள் மட்டுமே தொடர்புடையவை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். நான் வேறு எந்தத் திரைப்படங்களுக்கும் இப்படி உழைத்தது இல்லை. அப்படியொரு உழைப்பு.” எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், இப்படம் வெற்றி பெற நடிகை நயன்தாரா சென்னையிலுள்ள காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்று வேண்டுதல் வைத்ததுடன் அங்கு சிலருக்கு சேலையையும் பரிசாகக் கொடுத்து வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மூக்குத்தி அம்மன் - 2 வெற்றிக்காக கோவிலில் வேண்டிய நயன்தாரா!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗