மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக நிா்வாகிகள் குறித்து... மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக நிா்வாகிகள் - டிஎன்எஸ் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக நிா்வாகிகள் பலா் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா். மதுரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியைச் சேர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் பத்துக்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகித் தங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். திமுகவில் இணைந்தவர்களில், அதிமுக திருப்பரங்குன்றம் கிழக்குப் பகுதிச் செயலாளர் வழக்குரைஞர் எம். ரமேஷ், திருப்பரங்குன்றம் நிலையூர் ஒன்றியச் செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவுச் செயலாளர் வழக்குரைஞர் ஆர். சேதுராமன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்குரைஞர் எம். ஜெய பிரசன்னா, திருப்பரங்குன்றம் விவசாயப் பிரிவுச் செயலாளர் பி. பாண்டி, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் கவிஞர் பி. மோகன்தாஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக நிா்வாகிகள்
📅
📍 Madurai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗