முகத்தில் தெரியும் மாற்றங்களை வைத்தே இரும்புச்சத்து குறைபாட்டை கண்டறிய முடியுமா?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
முகத்தில் தெரியும் மாற்றங்களை வைத்தே இரும்புச்சத்து குறைபாட்டை கண்டறிய முடியுமா?

"உங்களுக்கு 'ஃபெரிட்டின் முகம்' இருக்கிறதா?" என்று டிக்டாக் காணொளி ஒன்றில் இளம் பெண் ஒருவர் கேட்கிறார். தனது தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கும் அவர், தன்னுடைய முந்தைய மற்றும் தற்போதைய புகைப்படங்களை ஒப்பிட்டுக் காட்டுகிறார். கண்களுக்குக் கீழே கருவளையங்கள், பொலிவிழந்த சருமம், எளிதில் உடையும் முடி ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் அவர், தனது உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என்கிறார். உடலில் இரும்புச்சத்தைச் சேமித்து வைக்கும் புரதமான ஃபெரிட்டினின் அளவு குறைவாக இருந்தால், அது முகத்தில் வெளிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறும் காணொளிகளும் பதிவுகளும் டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகின்றன. வெளிறிய அல்லது சாம்பல் நிறத் தோற்றம் கொண்ட சருமம், கண்களுக்குக் கீழே கருவளையங்கள், உதடுகள் வறண்டு அல்லது வெடித்து காணப்படுவது, முடி உதிர்வது, நகங்கள் எளிதில் உடைவது ஆகியவை ஃபெரிட்டின் குறைபாட்டின் அறிகுறிகள் என சமூக ஊடகப் பயனர்கள் பட்டியலிடுகின்றனர். சிலர், முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை வெளிப்படுத்தும் வகையில், முன்பு எடுத்த புகைப்படங்களுடன் தற்போதைய புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர். 'ஃபெரிட்டின் முகம்' என்ற சொற்றொடர் சமூக ஊடகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பான காணொளிகள் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன. ஆனால், "ஃபெரிட்டின் முகம் என்பது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கண்டறிதல் முறை அல்ல" என்று பிரிட்டனின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த பொது மருத்துவர் டாக்டர் அஜிசா செசே கூறுகிறார். இரும்புச்சத்துக் குறைபாட்டால் சருமம் வெளிறுதல், முடி உதிர்தல், நகங்கள் எளிதில் உடைதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். எனினும், இவை வேறு பல உடல்நலப் பிரச்னைகளின் அறிகுறிகளாகவும் இருக்கலாம் என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images ஃபெரிட்டின் அளவு, உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இரும்புச்சத்தின் அளவைக் காட்டுகிறது. அதேவேளையில், ஹீமோகுளோபின் என்பது ரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஒரு புரதம். இது உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்சிஜனைக் கொண்டு செல்கிறது. ஹீமோகுளோபின் அளவு குறையும்போது, ரத்தத்தால் போதுமான அளவு ஆக்சிஜனைக் கொண்டு செல்ல முடியாது. இந்த நிலைதான் ரத்தசோகை எனப்படுகிறது. End of அதிகம் படிக்கப்பட்டது ஆனால், ரத்தசோகை ஏற்படுவதற்கு முன்பே உடலில் சேமிக்கப்பட்டுள்ள இரும்புச்சத்து குறைந்துவிடலாம். எனவே, ஒருவருக்கு ரத்தசோகை இல்லாவிட்டாலும், இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு அதன் அறிகுறிகள் வெளிப்படலாம். "உடலில் இரும்புச்சத்து சேமிப்பு குறைந்துவிட்டாலும், ஹீமோகுளோபின் அளவு தொடர்ந்து இயல்பாக இருக்கலாம். இதுவே இந்த நிலையின் முக்கிய முரண்பாடு" என்று ரத்தவியல் நிபுணரான டாக்டர் ட்ரூ ப்ரோவன் கூறினார். மற்றொரு ரத்தவியல் நிபுணரான டாக்டர் சூ பாவோர்ட், பெண்களிடையே இரும்புச்சத்துக் குறைபாடு பொதுவாகக் காணப்படுவதாகவும், பல நேரங்களில் அது கண்டறியப்படாமலேயே இருப்பதாகவும் தெரிவித்தார். பிரிட்டிஷ் சொசைட்டி ஆஃப் காஸ்ட்ரோஎன்டராலஜியின் வழிகாட்டுதல்களின்படி, ஒரு லிட்டர் ரத்தத்தில் ஃபெரிட்டின் அளவு 15 மைக்ரோகிராமுக்குக் குறைவாக இருந்தால், உடலில் இரும்புச்சத்து இல்லாததைக் குறிக்கிறது. அதேவேளையில், ஃபெரிட்டின் அளவு 30 மைக்ரோகிராமுக்குக் குறைவாக இருந்தால், உடலில் இரும்புச்சத்து இருப்பு குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கில் @marvluceskin என்ற பெயரில் முடி உதிர்தல் தொடர்பான பதிவுகளை வெளியிட்டு வரும் 32 வயதான லூசி எம் என்ற பெண், 'ஃபெரிட்டின் முகம்' என்ற கருத்து, தனக்கு ஏற்பட்ட மாற்றங்களை விவரிப்பதாகத் தோன்றியதாகக் கூறினார். 2021-ஆம் ஆண்டில் அவருக்கு இதயத் துடிப்பு அதிகரித்தல், படபடப்பு, சோர்வு, முடி உதிர்தல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டன. அவரது ரத்தப் பரிசோதனை முடிவுகள் இயல்பாக இருப்பதாகக் கூறப்பட்டதுடன், அவருக்குப் பொதுவான பதற்றக் கோளாறு இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவரது ஃபெரிட்டின் அளவு ஒரு லிட்டருக்கு 12 மைக்ரோகிராம் மட்டுமே இருப்பது தெரியவந்தது. தனது தோல் சாம்பல் நிறத்தில் காணப்பட்டதாகவும், முடி பொலிவிழந்து எளிதில் உடையும் தன்மையுடன் மாறியதாகவும் லூசி கூறினார். ஃபெரிட்டின் அளவு குறைவாக இருந்தபோதும், அது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியபோதும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பிபிசியுடன் பகிர்ந்துகொண்டார். அப்போது தனது உடல்நிலை மற்றும் தோற்றத்தில் ஏற்பட்ட வேறுபாடு, "இரவுக்கும் பகலுக்கும் உள்ள வேறுபாடு போல" இருந்ததாக அவர் விவரித்தார். 'ஃபெரிட்டின் முகம்' தொடர்பான காணொளிகள், கண்களுக்குக் கீழே கருவளையங்கள், வெளிறிய சருமம், வறண்ட உதடுகள், மெலிந்த முடி, எளிதில் உடையும் நகங்கள் போன்ற அறிகுறிகள் தங்களுக்கு இருக்கின்றனவா என்று பார்வையாளர்களைச் சோதித்துப் பார்க்கத் தூண்டுகின்றன. மேலும், இந்த அறிகுறிகளைத் தங்கள் முகத்தோற்றத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் ஊக்குவிக்கின்றன. "நீங்கள் அழகற்றவர் அல்ல; உங்கள் ஃபெரிட்டின் அளவுதான் குறைவாக இருக்கிறது," என்று ஒரு காணொளிப் படைப்பாளர் கேமராவைச் சுட்டிக்காட்டிக் கூறுகிறார். ஆனால், ஒருவரின் முகத்தோற்றத்தை வைத்து மட்டும் அவரது உடலில் ஃபெரிட்டின் அளவு குறைவாக உள்ளதா என்பதைத் தீர்மானிக்க முடியாது என்று டாக்டர் ட்ரூ ப்ரோவன் தெரிவித்தார். கடுமையான ரத்தசோகை உள்ளவர்களின் முகம் வெளிறிக் காணப்படலாம் என்றும், சோர்வால் கண்களுக்குக் கீழே கருவளையங்கள் ஏற்படலாம் என்றும் அவர் விளக்கினார். இருப்பினும், இத்தகைய வெளிப்புற அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடக்கூடியவை. அவற்றை மட்டும் வைத்து இரும்புச்சத்துக் குறைபாட்டை உறுதிப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். கருமையான சருமம் கொண்டவர்களுக்கு, சரும நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவ்வளவு வெளிப்படையாகத் தெரியாமல் போகலாம் என்று டாக்டர் செசே கூறினார். இதனால், இணையத்தில் குறிப்பிடப்படும் அறிகுறிகளை மட்டும் தேடிப் பார்ப்பவர்கள் தங்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருப்பதை உணராமல் போகலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மருத்துவர்களைப் பொறுத்தவரை, ஒருவரின் தோற்றத்தைவிட அவருக்கு ஏற்படும் அறிகுறிகளும், அவர் எப்படி உணர்கிறார் என்பதும் முக்கியமானவை. இரும்புச்சத்துக் குறைபாட்டை உறுதிப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சையைத் தீர்மானிக்கவும் ரத்தப் பரிசோதனைகள் அவசியம் என்று டாக்டர் ட்ரூ ப்ரோவனும் டாக்டர் செசேவும் தெரிவித்தனர். சிகிச்சையின்போது, இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கான அடிப்படைக் காரணத்தையும் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். அதிகப்படியான மாதவிடாய் ரத்தப்போக்கு, உணவில் போதிய இரும்புச்சத்து இல்லாமை, இரைப்பை குடல் பகுதியில் ஏற்படும் ரத்த இழப்பு, குடல் வழியாக இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதில் உள்ள சிக்கல்கள் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம். பொதுவாக, இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கு வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் இரும்புச்சத்து மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை வெறும் வயிற்றில், குறிப்பாகக் காலையில் எழுந்தவுடன் எடுத்துக்கொள்வது சிறந்தது என்று டாக்டர் பாவோர்ட் அறிவுறுத்தினார். மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் நேரத்தில் தேநீர் அல்லது காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஏனெனில், அவை உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைக் குறைக்கக்கூடும். இறைச்சி, பீன்ஸ், பருப்பு வகைகள், கீரைகள், இரும்புச்சத்து சேர்க்கப்பட்ட தானியங்கள் உள்ளிட்ட உணவுகள் மூலமாகவும் இரும்புச்சத்தைப் பெறலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி, இரும்புச்சத்துக் குறைபாடு இருப்பதை உறுதிப்படுத்தாமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தீங்கு விளைவிக்கலாம். மேலும், சுயமாகச் சிகிச்சை மேற்கொள்வதால், குறைபாட்டுக்குக் காரணமான அடிப்படைப் பிரச்னையைக் கண்டறிவதில் தாமதம் ஏற்படலாம். இருப்பினும், சமூக ஊடகங்கள் பெண்கள் தங்களின் அறிகுறிகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள உதவியுள்ளதாக லூசி கூறினார். உடலில் ஏதோ சரியில்லை என்று உணரும்போது, அதுகுறித்து கேள்வி எழுப்புவதற்கான நம்பிக்கையையும் அவை சிலருக்கு அளித்துள்ளன என்றார். "'அடடா, இது எனக்கும் இருக்கிறதே!' என்று பல பெண்கள் கூறுகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார். அதேவேளையில், தான் ஒரு மருத்துவர் அல்ல என்றும், தனது பதிவுகள் தனது சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், பெண்கள் தங்களின் உடல்நலம் குறித்து கேள்வி எழுப்பவும், தங்களுக்குத் தேவையான மருத்துவ உதவியைக் கோரவும் தேவையான தகவல்களையும் நம்பிக்கையையும் அளிக்க முடிவதாக லூசி நம்புகிறார். சமூக ஊடகங்கள் "இருமுனைக் கத்தி" போன்றவை என்று டாக்டர் செசே குறிப்பிட்டார். அவை மக்களை மருத்துவ உதவியை நாடத் தூண்டலாம். அதே நேரத்தில், ஒரு குறுங்காணொளியில் கூறப்படும் தகவல்களை மட்டும் வைத்து, தங்களுக்கு என்ன பாதிப்பு என்பதைத் தவறாகத் தீர்மானித்துக்கொள்ளவும் வழிவகுக்கலாம். லூசியின் கருத்துப்படி, இத்தகைய காணொளிகளின் பயன், முகத்தோற்றத்தை வைத்து இரும்புச்சத்துக் குறைபாட்டைத் தாங்களாகவே கண்டறிவதில் இல்லை. மாறாக, உடலில் ஏதேனும் பிரச்னை இருப்பதை உணர்ந்து, எப்போது மருத்துவரை அணுக வேண்டும், அவரிடம் என்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதில்தான் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை