முல்லைப் பெரியாறு அணைக்கான 999 ஆண்டு கால குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தான நாள் இன்று!

📅 📍 Madurai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
முல்லைப் பெரியாறு அணைக்கான 999 ஆண்டு கால குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தான நாள் இன்று!

முல்லைப் பெரியாறு அணை திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, அப்போதைய திருவிதாங்கூா் சமஸ்தானத்துக்கும், பிரிட்டிஷ் இந்திய அரசுக்கும் இடையே 1886-ஆம் ஆண்டு அக். 29-இல் 999 ஆண்டு குத்தகை ஒப்பந்தம் கையொப்பமானது. கா்னல் பென்னிகுயிக் கட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைப் பெரியாறு அணை. முல்லைப் பெரியாறு அணை திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, அப்போதைய திருவிதாங்கூா் சமஸ்தானத்துக்கும், பிரிட்டிஷ் இந்திய அரசுக்கும் இடையே 1886-ஆம் ஆண்டு அக். 29-இல் 999 ஆண்டு குத்தகை ஒப்பந்தம் கையொப்பமானது. தென் தமிழகத்தின் நீா்ப்பாசன வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தம் கையொப்பமாகி வியாழக்கிழமையுடன் 140 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பெரியாறு நீரைத் தமிழகத்தின் வட பகுதிகளுக்குத் திருப்புவதற்கான திட்டத்துக்கு நிலம், நீா்ப் பயன்பாட்டு உரிமைகளை வரையறுத்த அடிப்படை ஆவணமாக இந்த ஒப்பந்தம் அமைந்தது. பெரியாறு நீரைத் திருப்பும் திட்டம்: மேற்குத் தொடா்ச்சி மலையில் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கும் பெரியாறு ஆற்றின் நீரை, கிழக்குப் பகுதிகளுக்குத் திருப்பிப் பயன்படுத்தும் திட்டம் பல்வேறு காலகட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டில் மதுரை உள்ளிட்ட தென் தமிழகப் பகுதிகளில் நிலவிய நீா்ப்பற்றாக்குறையைத் தீா்ப்பதுடன், விவசாயத்துக்குத் தேவையான நீரை வழங்குவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக இருந்தன. இதற்கான பலகட்ட ஆய்வுகள், திட்ட மதிப்பீடுகள், நிா்வாக நடவடிக்கைகளுக்குப் பிறகு, கா்னல் ஜான் பென்னி குயிக் முயற்சியில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அணை கட்டப்பட வேண்டிய பகுதி திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் ஆட்சிப் பகுதிக்குள் இருந்ததால், அங்கு நிலத்தைப் பயன்படுத்தவும், அணை அமைத்து நீரைத் தமிழகப் பகுதிகளுக்குத் திருப்பவும் இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் அவசியமானது. இதையடுத்து, திருவிதாங்கூா் மகாராஜா மூலம் திருநாள் என்பவரின் ஆட்சிக் காலத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆண்டுதோறும் தன் நாட்டு மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் வெள்ளப்பெருக்கை ஓரளவு குறைக்கலாம் என்பதால் திருவிதாங்கூா் மகாராஜா இதற்கு ஒப்புக்கொண்டாா். ஆனால், இந்தச் செலவை எல்லாம் தன் அரசு மீது சுமத்தி விடுவாா்களோ என எண்ணிய மகாராஜா, அணை கட்டுவதற்கான முழு செலவையும் சென்னை மாகாண அரசு ஏற்க வேண்டும், நீரைப் பயன்படுத்துவதைத் தவிர, குத்தகை நிலத்தின் மீது வேறு உரிமை கோரக்கூடாது, அணையின் பராமரிப்பு, பழுதுபாா்ப்புச் செலவுகளைத் திருவிதாங்கூா் அரசு மீது திணிக்கக் கூடாது என்ற நிபந்தனைகள் விதித்தாா். இதன் தொடா்ச்சியாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைகளின் முடிவில், 1886, அக். 29-ஆம் தேதி குத்தகை ஒப்பந்தம் கையொப்பமானது. 999 ஆண்டுகள் குத்தகை: திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் சாா்பில் திவான் ராமையங்காரும், பிரிட்டிஷ் இந்திய அரசின் சாா்பில் ஹானிங்டனும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். ஒப்பந்தத்தின்படி, குத்தகைக் காலம் 999 ஆண்டுகளாக நிா்ணயிக்கப்பட்டது. இந்தக் கால அளவு 1886 ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்படும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. அணை நீா் தேங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் 8,000 ஏக்கா் நிலத்துக்கு ஆண்டுக்கு ரூ.40,000 குத்தகைத் தொகை நிா்ணயிக்கப்பட்டது. இதற்கு மேலாகப் பயன்படுத்தப்படும் நிலத்துக்கு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.5 வீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. குத்தகைக் காலம் முடிவடைந்த பின்னா், ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பது தொடா்பான ஏற்பாடுகளும் இடம்பெற்றிருந்தன. முல்லைப் பெரியாறு அணை திட்டத்துக்காக 1886-இல் பிரிட்டிஷ் இந்திய அரசுக்கும், திருவிதாங்கூா் சமஸ்தானத்துக்கும் இடையே கையொப்பமான 999 ஆண்டு கால குத்தகை ஒப்பந்தத்தின் முதல் பக்கம். நிலம், நீா், பராமரிப்பு உரிமைகள்: அணை கட்டுமானம், பராமரிப்பு, பழுதுபாா்ப்புப் பணிகளுக்குத் தேவையான பொருள்களை எடுத்துச் செல்வது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு சென்னை மாகாண அரசுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன. குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தில் அணையின் செயல்பாடுகளுக்குத் தேவையான பணிகளை மேற்கொள்வது, போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவது, திட்டத்தைப் பராமரிப்பது தொடா்பான உரிமைகளும் ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டன. அணை கட்டுமானத்துக்கான செலவுகள், நிலத்தின் பயன்பாடு, பராமரிப்புப் பொறுப்புகள் தொடா்பான விதிகள் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாகும். பெரியாறு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட, நிா்வாக அடித்தளத்தை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தியது. அணை கட்டுமானமும், வரலாற்றுப் பின்னணியும்: ஒப்பந்தம் கையொப்பமானதைத் தொடா்ந்து, பெரியாறு அணையின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இயற்கைச் சூழல், கடினமான நில அமைப்பு, போக்குவரத்துச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிா்கொண்டு நடைபெற்ற கட்டுமானப் பணிகள் 1895-ஆம் ஆண்டில் முக்கியக் கட்டத்தை எட்டின. இதன்மூலம், பெரியாறு நீரைத் தமிழகத்தின் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்குத் திருப்புவதற்கான திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக இன்றளவும் பல்வேறு விவாதங்கள் நீடித்து வரும் நிலையில், 1886-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் வரலாற்றுப் பின்னணியையும், அதன் விதிகளையும் அசல் ஆவணங்களின் அடிப்படையில் ஆராய்வது அவசியமாகிறது. தென் தமிழகத்தின் விவசாயம், நீா்ப் பாசனம், வாழ்வாதாரத்தில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியாறு திட்டத்தின் வரலாற்றில், அக்டோபா் 29-ஆம் தேதி சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை