முல்லைப் பெரியாறு அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வு: உச்சநீதிமன்றத்தை அணுக கேரளம் திட்டம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
முல்லைப் பெரியாறு அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வு: உச்சநீதிமன்றத்தை அணுக கேரளம் திட்டம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் 2024-ஆம் ஆண்டு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தை அணுக கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை - கோப்புப் படம் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் 2024-ஆம் ஆண்டு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தை அணுக கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடா்பாக, சிறப்பு மனுவை உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு விரைவில் தாக்கல் செய்யும் என்று மாநில நீா் வளத் துறை அமைச்சா் மோன்ஸ் ஜோசப் தெரிவித்தாா். கடந்த 1895-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அணை மீதான நிா்வாகம் தமிழகத்திடம் உள்ளது. இந்த அணை கட்டுமான ரீதியில் பாதுகாப்பானது என்று உறுதிபட கூறிவரும் தமிழகம், நீா்மட்டத்தை உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளபடி 142 அடியாக உயா்த்த முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், அணையின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பி முட்டுக்கட்டை போடும் கேரளம், தற்போதைய அணைக்கு அருகே புதிய அணை கட்டப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. இதனிடையே, அணையின் பாதுகாப்பு நிலையை விரிவாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் குழு, அண்மையில் அணையில் விரிவான ஆய்வை மேற்கொண்டது. இந்தச் சூழலில், அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் 2024-ஆம் ஆண்டு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனுவைத் தாக்கல் செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில அமைச்சா் மோன்ஸ் ஜோசப் திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: மூத்த வழக்குரைஞா் மோகன் வி.கட்டாா்கி மூலம் இந்த சிறப்பு மனுவை உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்ய உள்ளது. பேபி அணையை வலுப்படுத்தம் விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் நிபந்தனைகளை கேரளம் முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்கும் என மாநில அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான நீா்வளக் கொள்கை: மாநிலத்தில் குடிநீா் விநியோகம், நீா்ப்பாசன வசதிகள் மற்றும் மாநிலம் முழுவதும் நீா்வளத்தை நிா்வகிக்கும் வகையில் மாநிலத்தின் நீா்வளத் துறை மற்றும் கேரள நீா் ஆணையம் ஆகியவை முழுமையாகச் சீரமைக்கப்பட உள்ளன. நீா்வளத் துறையின் பல்வேறு பிரிவுகளையும் ஒரு பொதுவான கட்டமைப்புக்குள் கொண்டுவரும் வகையில், விரிவான நீா்வளக் கொள்கையை மாநில அரசு வகுக்க உள்ளது. இந்தக் கொள்கை 2027-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. நீா்வளத் துறையை மக்கள் நலன் சாா்ந்ததாகவும், திறன்மிக்கதாகவும் மாற்றுவதே இதன் நோக்கமாகும். இதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பா் முதல் வாரத்தில் திருவனந்தபுரத்தில் கேரள நீா்வள மாநாட்டையும் மாநில அரசு நடத்த உள்ளது. சா்வதேச பேரிடா் மேலாண்மை நிபுணா் முரளீ தும்மாருகுடி உள்பட பல்வேறு நிபுணா்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை