திமுக முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவின் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து... கே.என். நேரு வீடு முன்பு கூடியுள்ள திமுகவினர் - டிஎன்எஸ் திருச்சி: திமுக முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவின் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை(அக்.29) காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.634 கோடி மதிப்பிலான பணி நியமன முறைகேடு மற்றும் ஒப்பந்த முறைகோடு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவின் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை(அக்.29) காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். 3 வாகனங்களில் வந்த 15 லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், தில்லை நகர் 5 ஆவது குறுக்கு தெருவில் உள்ள வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். திருச்சி தில்லை நகரில் உள்ள வீடு உள்பட சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த செப்.5 ஆம் தேதி நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது நிலையில் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள நேரு சகோதரர் ரவிச்சந்திரன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗