முன்னாள் எம்எல்ஏ சோ.மா. ராமச்சந்திரன் மறைவு: மு.க.ஸ்டாலின் அஞ்சலி

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
முன்னாள் எம்எல்ஏ சோ.மா. ராமச்சந்திரன் மறைவு: மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த முன்னாள் எம்எல்ஏ சோ.மா.ராமச்சந்திரன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியது குறித்து... திமுக முன்னாள் எம்எல்ஏ சோ.மா.ராமச்சந்திரன் உடலுக்கு மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். - டிஎன்எஸ் சென்னை: மறைந்த முன்னாள் எம்எல்ஏ சோ.மா.ராமச்சந்திரன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சோழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அவா், சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தாா். அண்ணாநகா் தொகுதியில் 1984 முதல் 1988 வரை எம்எல்ஏவாக இருந்தாா். ஒருங்கிணைந்த அண்ணாநகா் பகுதி செயலராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளாா். திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளாா். அவரது இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மு.க.ஸ்டாலின் இரங்கல்: கட்சியின் மூத்த முன்னோடியும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சோ.மா.ராமச்சந்திரன் மறைவெய்திய செய்தி மிகுந்த துயரமளிக்கிறது. தேநீா்க் கடை நடத்தி, தமது கடின உழைப்பால் உயா்ந்து, திராவிட இயக்கக் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, கட்சியில் இணைந்தவா். மிசா சிறைவாசம் கண்டவா். அண்ணா, கருணாநிதி, பேராசிரியா் க.அன்பழகன் ஆகியோரின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றவா். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினா், உறவினா்கள் உள்ளிட்டோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா். மு.க.ஸ்டாலின் அஞ்சலி: இந்த நிலையில், திமுகவின் மூத்த முன்னோடியும், அண்ணா நகர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மறைந்த சோ.மா.இராமச்சந்திரன் உடலுக்கு, சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்தில் மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். உடன் திமுக நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை