முரசு புயல் காரணமாக ஒடிசாவில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுவது குறித்து... முரசு புயல் காரணமாக ஒடிசாவில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு திங்கள்கிழமை (நவ. 2) வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வங்கக்கடலில் தீவிரப் புயலாக மாறியுள்ள 'முரசு' புயல் காரணமாக, ஒடிசா அரசு தாழ்வான மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை உருவான ‘முரசு’ புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நவ. 3 அதிகாலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தத் தீவிரப் புயல், அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கத்தால் தெற்கு ஒடிசாவில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், ஒடிசாவின் தெற்கு மாவட்டங்களான கஞ்சம், கஜபதி, ராயகடா, கோராபுட் மற்றும் மல்காங்கிரி ஆகிய பகுதிகள் புயல் மற்றும் கனமழையால் அதிகம் பாதிக்கப்படலாம் என்பதால் அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும் பணிகளை ஒடிசா அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், அண்மையில் கரையைக் கடந்த ஒர்னாப் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்காகவும் மீட்புப் பணிகளுக்காகவும் களமிறக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர், தற்போது ஒடிசாவின் தெற்கு மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முரசு புயல்: மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் ஒடிசா அரசு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗