வங்கக் கடலில் 'முரசு' புயல் உருவாக வாய்ப்புள்ள நிலையில் தமிழ்நாட்டில் எங்கெங்கு மழை பெய்யும் என்பது பற்றி... முரசு புயல்... - TN weatherman ஒர்னாப் புயலைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவாகும் முரசு புயலும் ஆந்திரத்துக்கு தான் நகர வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் (நாளை) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயலாக வலுப்பெறும் பட்சத்தில் இந்தியா பரிந்துரைத்த 'முரசு' என பெயரிடப்படும். தமிழ்நாட்டில் எங்கெங்கு மழை? முரசு புயல் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் 'தமிழ்நாடு வெதர்மேன்' என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார். அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில், "ஒர்னாப் புயலைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவாகும் முரசு புயலும் ஆத்திரத்துக்குதான் நகரும். தமிழ்நாட்டிற்கு பெரிதாக எதுவும் இல்லை. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மற்றும் வட தமிழ்நாட்டில் நவ. 2, 3 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 'முரசு' புயல் உருவாகும் சூழல் நிலவுகிறது. இது புயலாக வலுப்பெற்றால், ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு மற்றும் மத்திய கடற்கரைப் பகுதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர்: ஆந்திரக் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளதால், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, பொன்னேரி – கும்மிடிப்பூண்டி – பழவேற்காடு பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. வட தமிழகத்தின் பிற பகுதிகள்: நவம்பர் 2, 3 தேதிகளில் வட தமிழகத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்புற மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஆந்திரத்தின் தெற்கு மற்றும் மத்திய கடற்கரைப் பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரம் வட தமிழகத்தில், குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் (KTCC) மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார். Cyclone Murasu for Andhra; Namakku perusa ethuvum illa from Murasu. Only Moderate Rains for KTCC (Chennai) & Othe parts of North TN on November 2â3.ââââââââââââââââââCyclone Murasu is in the making, as indicated in my earlier post. If the system intensifies⦠pic.twitter.com/AOTdfUCGQl தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
📢 விளம்பரம் • Advertisement
விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗