முரசு தீவிர புயலாகவே கரையை கடக்கக் கூடும் - தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
முரசு தீவிர புயலாகவே கரையை கடக்கக் கூடும் - தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

பட மூலாதாரம், IMD வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள முரசு தீவிர புயல் அதே வீரியத்துடன் தீவிர புயலாகவே கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ள தகவல்படி, "வங்கக்கடலின் மத்திய மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள 'முரசு' தீவிரப் புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இன்று (நவம்பர் 2, 2026) காலை 11.30 மணியளவில், புயல் அதே பகுதியில் நிலைகொண்டிருந்தது. இந்தப் புயல் சென்னைக்கு வடகிழக்கே 170 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இந்தத் தீவிரப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குக் கடலோரப் பகுதியான நெல்லூர் – நரசாபுரம் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளது. நவம்பர் 2ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கும், நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். சென்னை, மச்சிலிப்பட்டினம் மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள டாப்ளர் வானிலை ரேடார்கள் மூலம் 'முரசு' தீவிரப் புயல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது." கடலோர ஆந்திரப் பிரதேசம்: பட மூலாதாரம், IMD ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிகள் மற்றும் கடலுக்கு அப்பால் உள்ள பகுதிகள்: End of அதிகம் படிக்கப்பட்டது வட தமிழ்நாடு – புதுச்சேரி கடலோரப் பகுதிகள்: ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகள்: வட தமிழ்நாடு – புதுச்சேரி கடலோரப் பகுதிகள்: கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்: மீன்வளத் துறையினர் மற்றும் மீன்பிடித் துறைமுக அதிகாரிகள் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதுடன், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் அடுத்தடுத்த கடல்சார் எச்சரிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். நவம்பர் 3ஆம் தேதி வரை வெளியிடப்படும் சமீபத்திய பகுதி சார்ந்த அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப மீனவர்கள் தங்களது நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும். மீன்பிடி, கப்பல் போக்குவரத்து, துறைமுகம் மற்றும் கடல்சார் சுற்றுலா நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளின் அளவு மற்றும் காலத்தை நவம்பர் 3ஆம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிடும் அடுத்தடுத்த முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். பட மூலாதாரம், Getty Images கடலோர ஆந்திரப் பிரதேசத்தின் உள்மாவட்டங்கள், ராயலசீமா, தெற்கு ஒடிசா, தெலங்கானா மற்றும் தெற்கு சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளுக்கான முன்னறிவிப்பு: (இந்திய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பின் அடிப்படையில் மேற்கண்ட தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.) புயல் தொடர்பான அவசர உதவி தேவைப்படுவோர் மாநில அவசர உதவி எண்ணான 1070 அல்லது மாவட்ட அவசர உதவி எண்ணான 1077 ஆகியவற்றைத் தொடர்புகொள்ளலாம் என தமிழக அரசு கூறியுள்ளது. புயலின் நகர்வு, காற்றின் வேகம், மழை எச்சரிக்கை ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் வெளியிடும் அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும் எனவும் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை