பாமணி இல்லத்தில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டது பற்றி... முதல்வர் விஜய் - கோப்புப் படம் முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக மாறப்போகும் பாமணி இல்லத்தில் இன்று காலை முதல்வர் ச. ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் விஜய், அலுவலகப் பணிகளுக்காக தலைமைச் செயலகத்துக்கு நீலாங்கரை இல்லத்தில் இருந்து சென்று வருகிறார். நீலாங்கரை முதல் தலைமைச் செயலகம் இடையிலான சாலைகளில் முதல்வர் விஜய்யின் பயணத்தின்போது போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால், மக்களும் அவதிக்குள்ளாவதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் பொதிகை வளாகத்தில் அமைந்துள்ள பாமணி இல்லத்தை முதல்வர் விஜய்யின் அலுவல்பூர்வ இல்லமாக மாறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. பல ஆண்டுகளாக அரசு விருந்தினர் இல்லமாக இருந்த பாமணி இல்லத்தை நவீன வசதிகளுடன், அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய முகாம் அலுவலகமாக மாற்றும் பணிகளை பொதுப்பணித்துறையினர் கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், பாமணி இல்லத்தை முதல்வர் விஜய் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள், அலுவலக அமைப்பு குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். இதனிடையே, முதல்வரின் புதிய அலுவல்பூர்வ இல்லத்துக்கு ‘வெற்றி இல்லம்’ என்று பெயர் மாற்றப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் இல்லங்களுக்கு தமிழகத்தில் ஓடும் ஆறுகளின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓடும் காவிரி ஆற்றின் கிளை நதியான "பாமணி ஆறு" பெயர் வைக்கப்பட்டது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗